இஸ்லாமியர்கள் நோன்பு துறக்கும் நிலைமை!

நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் பேரீச்சம்பழமும் உள்ளடங்குவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இதன்படி, நாட்டில் தற்போது பேரீச்சம்பழத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுகளுக்கு அமைய நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள் […]
மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில்!

37, 500 மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (28) நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன் மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளது. இதுதவிர கடந்த வெள்ளிக்கிழமை 40, 000 மெட்ரிக் டன் எரிபொருளுடன் நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டமையை அடுத்து குறித்த எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறாயினும் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்களின் […]
மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீதான தாக்குதல் என்பவற்றினால் இந்த விலை அதிகாிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை முறையே 120 டொலர்களாக உயர்ந்துள்ள அதேவேளை, WTI மசகு எண்ணெய் விலை 114 டொலராக உயர்வடைந்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகாிப்பு

யுக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது. வார இறுதியில் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு இருந்தாலும், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் அதாவது 56 டொலரினால் உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த ஒரு வருடத்தினுள் தங்க விலையின் அதிகாிப்பு 13 சதவீதம் அதாவது 230 டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, […]
54 வருடங்களின் பின்னர் சர்வதேச சேவைகள் ஆரம்பம்

இரத்மலானை விமான நிலையத்தினூடாக இன்று முதல் சர்வதேச விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக 54 வருடங்களின் பின்னர் மீளவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இதேவேளை, இரத்மலானை விமான நிலையத்தின் திறன் மற்றும் ஓடுபாதை செயற்திறன் என்பன சுமார் […]
பணவீக்கம் சர்வதேச நாணய நிதியம் பதிலடி

இலங்கையின் பொதுக்கடன் நிலைபேறான தன்மையினை இழந்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை அரசாங்கத்திற்கு பாரியதொரு தோல்வியாகும். அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கை முழு நாட்டு மக்களையும் கடனாளியாக்கியுள்ளது. நாணயம் அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிட்டதற்கு நாணய நிதியம் கன்னத்தில் அறைந்தாற்போல் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தின் ஊடாக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம். நிதியமைச்சர் பாராளுமன்றத்துடன் சுமுகமாக செயற்பட வேண்டும் ஸ்ரீ என ஐக்கிய […]
இந்தியாவுக்கான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

இந்தியாவுக்கான வாராந்த விமான சேவைகளை 88ஆக அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா, விமானப் பயணிகளுக்கான குமிழி முறைமை நீக்குகின்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவை கொவிட்-19 பரவலுக்கு மத்தியிலும் கடந்த இரண்டு வருடங்களில் தங்களது சந்தைகளை விஸ்தரித்திருந்தது. 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சியோல், சிட்னி, காத்மண்டு, பிராங்ஃபோரட், பாரிஸ் மற்றும் மொஸ்கோ ஆகிய இடங்களுக்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]