நாளாந்த மின் வெட்டு 15 மணி நேரமாகலாம்

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின் விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்தச் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தற்போது வரையில், நீர் மின் உற்பத்தியில், சுமார் 1,200 மெகா வோட் […]

நாட்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்வு

கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் தற்போது தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 200,000 ரூபாவாகவும், 22 காரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு தங்கம் இல்லை என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையாயின் அவர்கள் வழங்கும் தங்கத்தைக் கொண்டு மாத்திரம் […]

Lanka IOC யிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசல் கொள்வனவு!

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இலங்கைக்கு டீசல் கிடைக்கும் வரை லங்கா ஐஓசியிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசலைக் கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்தார். அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இவ்வாறு டீசல் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் டீசல் உடன் வருகை தரும் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் வரை மேற்படி நடவடிக்கைகளுக்காக இந்த […]

உச்சம் தொட்ட மின் நெருக்கடி: 12 மணி நேர மின் துண்டிப்பு

மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த நிலைமை ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. colombo தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை. […]

ஒரு டொலர் 450 ரூபா வரை செல்லும், பேராசிரியர்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் அமெரிக்க டொலர் 450 ரூபாவை நெருங்குவதைத் தடுக்க முடியாது என இலங்கை வடமேல் பல்கலைக் கழகத்தின் வர்த்தக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித் துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தையும் பிரச்சினையின் அளவையும் அரசாங்கம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தின் சில தவறான முடிவுகளால் நிதி ஒழுக்கம் சீர்குலைந்தது மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் அரசாங்க வருவாயும் 25% குறைக்கப் பட்டது. இதை முதலில் பார்த்தபோது […]

274,000 க்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 274,000 க்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சு நேற்று விடுத்துள்ள தற்காலிக தரவுகளுக்கு அமைய, நேற்று முன்தினம் வரை நாட்டிற்கு 274,211 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த மாதத்தில் மாத்திரம் 95,77 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதற்கமைய சராசரியாக நாளாந்தம் 3,532 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பகுப்பாய்வுகளுக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் 1.34 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஸ்ரீலங்கன் விமான […]

எரிபொருள் இன்மையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன!

உரிய வகையில் எரிபொருள் கிடைக்காமையினால் பல எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் முதல் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக பலர் வரிசைகளில் காணப்படுவதாகவும் செய்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களைச் சூழவுள்ள வீதிகளில் எரிபொருளுக்காக பலர் வரிசைகளில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகம் வழமைபோல இடம்பெறுகிறது. எவ்வாறாயினும், கொலன்னாவ முனையத்திற்கு டீசல் இருப்புக்களை […]