மூடப்பட்டது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தை இன்று முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும். இன்றைய பங்குச் சந்தை நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 552.18 புள்ளிகளாலும், S&P SL20 சுட்டெண் 314.96 புள்ளிகளாலும் வீழ்ச்சியடைந்திருந்தன. இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,351.69 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 2,716.20 புள்ளிகளாகவும் காணப்பட்டன 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]
நாட்டின் பணவீக்கம் மார்ச்சில் 18.8 சதவீதமாக உயர்ந்தது!

இலங்கையின் பணவீக்கம், கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்து, அதிகூடிய உயர்வை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்தது. மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டை விட 42.2 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் என்றால் என்ன 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
இனி நாட்டில் நான்கு மணிநேரமே மின்வெட்டு!

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்.” இவ்வாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ”எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் எனக் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. எனவே, 2ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய […]
விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை

ஔடதங்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு ஔடத இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்களின் கோரிக்கையை மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அரச வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]
பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தம்

டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்ட போதிலும் டீசல் இன்மையால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடைக்கிடையே பல மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதன் காரணமாக டீசல் இல்லாத நிலையில் அரைக்கும் இயந்திரங்களின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுவதாக தொழிற்சாலை முகாமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவித்தாரணவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, […]
உணவுப்பொருள் நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் வீழ்ச்சி

உணவு பொருட்களுக்கான விலை அதிகரித்தமையை அடுத்து உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார துண்டிப்பும் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார். இதேவேளை, அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுகளே இவ்வாறு தேங்கியுள்ளதாக […]
கொழும்பு பங்கு பாிவர்த்தனை மட்டுப்படுத்தல்

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளை இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது, மின் தடை காரணமாக இவ்வாறு பங்கு சந்தை நடவடிக்கைள் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்கு சந்தை அறிவித்துள்ளது. இதன் இன்றும் நாளையும் முற்பகல் 10.30 முதல் மதியம் 12.30 வரை பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் […]