நாளை எட்டரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதற்கமைய, நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் மாலை 7 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரை ஒன்றரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுலாகவுள்ளது. G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு […]

இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் அரிசி தொகை அடுத்தவாரம் நாட்டுக்கு

இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை அடுத்தவாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, முதலாவது கட்ட அரிசி தொகை இவ்வாறு நாட்டை வந்தடையும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுமார் 40,000 மெற்றிக் டன் அளவானநாடு, சம்பா, வெள்ளை அரிசி ஆகிய அரிசி வகைகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன. அவற்றை உடனடியாக மக்களுக்கு சலுகை விலையில், விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள […]

ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோட முயல்கின்றனரா?

ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்தியாவின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது அதுமேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ளது,இதற்கு மத்தியில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என்ற தகவல்கள் கொழும்பில் காட்டுதீ போல பரவுகின்றன. கட்டுநாயக்காவிலும் இரத்மலானையிலும் ராஜபக்சாக்களை ஏற்றிக்கொண்டுபயணிப்பதற்காக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற தகவல்களும் கொழும்பில் காணப்படுகின்றன. முதல்குடும்பம் மீதான பொதுமக்களின் சீற்றம் கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளது. எனினும் ராஜபக்ச சகோதரர்களிற்கு […]

இலங்கை பிரச்சினை வெளியுலகில் இருந்து வாங்குவதற்கு பணம் இல்லையெ

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெரும்பாலான கிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றன. குடியிருப்பாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் உற்பத்திசெய்தனர். ஆனால் உலகமே இப்போது ஒரு கிராமமாக இருந்தாலும் நவீன தேசிய அரசுகள் தன்னிறைவு பெறுவது அரிது. அவர்கள் தங்கள் மிகையான உற்பத்தியை ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டு கையிருப்புக்களை சம்பாதித்து சேமிக்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் பற்றாக்குறைகளை மறைக்க இறக்குமதி செய்கிறார்கள். இலங்கையின் தற்போதைய பிரச்சினை என்னவென்றால், வெளியுலகில் இருந்து தனக்குத் தேவையானதை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லையென்ப […]

இலங்கை தங்கத்திற்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டுள்ளது

நாட்டில் தற்போது தங்கத்திற்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் தெரிவித்தார். அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சில வர்த்தகர்கள் தங்கத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! […]

சீமெந்தின் விலை 500 ரூபாவினால் அதிகாிப்பு

உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1,850 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் விலை 2, 350 ரூபாவாக அதிகாித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன, இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]

இறக்குமதி, ஏற்றுமதி கொள்கலன் 75 சதவீத வாகனங்கள் சேவையிலிருந்து விலகல்!

டீசல் இன்மையால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபடும் சுமார் 75 சதவீதமான ஊர்திகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது, குறிப்பாக ஏற்றுமதித்துறையை கடுமையாக பாதிக்கின்றதென அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்திகளின் ஒன்றிணைந்த சம்மேனத்தின் தலைவ் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார். ஏற்றுமதி கொள்கலன்களை உரிய நேரத்தில் கப்பலேற்றம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணித்த கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டுசெல்ல வேண்டும். எனினும், இதற்கு […]