இரவு வேளைகளில் நிறுத்தப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ள தாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. ஆனால் அவற்றுக் கான எரிபொருளைப் பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்கச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில வங்கி நடவடிக்கைகளே இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். இரவில் வங்கிகள் மூடப்பட்டு ஏடிஎம்கள் […]
அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

இந்தியாவிலிருந்து மேலதிக கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் இருப்பு அடுத்த வாரம் வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாடு, சம்பா மற்றும் வெள்ளைப் பச்சை அரிசி உள்ளிட்ட 40,000 மெட்ரிக்தொன் அரிசி சலுகை விலையில் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வியாபாரிகள் பண்டிகைக் காலத்தில் […]
இன்று முதல் எரிபொருள் பிரச்சினை தீருமா?

டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (02) நாட்டை வந்தடைந்துள்ளது. கப்பலில் கொண்டு வரப்பட்ட டீசலின் அளவு 40,000 மெட்ரிக் தொன் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கப்பல் இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று பிற்பகல் முதல் இந்த டீசலை நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தினசரி மின்வெட்டு 10 மணி நேரத்தை […]
வெற்று எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு சிலிண்டர் ரூ.16,000 வரையும் 5 கிலோ சிலிண்டர் ரூ.9,900க்கும் விற்கப்படுவதாகத் தெரிவிக்கப் படுகிறது. புதிய சிலிண்டர்களை எரிவாயு நிறுவனங்கள் விற்பனை செய்யாததால் அதிக விலைக்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பல விமானங்களை நிறுத்த தீர்மானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலிலுள்ள பல விமானங்களை திடீரென நிறுத்த முடிவு செய்துள்ளது. மே 12, 2022 முதல் அந்த விமானங்களில் பலவற்றை நிறுத்த முடிவு செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதன்படி, UL201 மற்றும் UL202 இன் கீழ் இயக்கப்படும் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டு கட்டுநாயக்க – பஹ்ரைன் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் […]
உணவுப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 30.2% ஆக உயர்வு

இலங்கையில் உணவுப் பணவீக்கம் கடந்த மாதத்தில் 30.2% வீதமாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையின்படி, உணவு அல்லாத பணவீக்கம் 13.4% ஆக உள்ளது. மார்ச் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் பணவீக்கம் 18.7% ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 25.7% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 10.1% ஆகவும் இருந்தன. உணவுப் பணவீக்கத்தின் படி, இலங்கை உலகில் 12ஆவது இடத்திலும், ஆசியாவில் 4ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 1ஆவது இடத்திலும் […]
இன்றைய (01.04.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் […]