இந்தியாவின் கடனுதவிகள் 5, 6 வாரங்களிற்கே – ரணில்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக மாற்றப்பட்டு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அதிகார கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்வதால் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி போன்றவை ஒரு திசையிலும் ஏனையவை இன்னொரு திசையிலும் பயணிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வங்கித்துறை ஆபத்தான நிலையில் உள்ளது என இந்திய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ள அவர் இந்திய கடனுதவிகள் நாட்டை சில […]
இன்று 5 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு!

நாட்டில் இன்றைய தினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சாரசபை நேற்று கோரிக்கையினை முன்வைத்திருந்த போதிலும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது. இதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் […]
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவி விலகினார்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் விலகியுள்ளார். அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து தானும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் செய்தியொன்றை பதிவிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், தான் ஏற்கனவே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
இன்றிரவு தீர்மானமிக்க அமைச்சரவை கூட்டம்

இன்னும் சற்று நேரத்தில் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும், அமைச்சரவையில் எஞ்சியவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]
இந்திய உதவியின்கீழ் இலங்கைக்கு 40,000 மெட்ரிக்தொன் டீசல் கையளிப்பு

இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஊடாக வழங்கப்படுகின்ற 40,000 மெட்ரிக்தொன் டீசல் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இலங்கை வலுச்சக்தி அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே அவர்களிடம் கொழும்பில் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, எரிபொருளுக்கான கடனுதவியின்கீழ் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்டவற்றின் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் நான்காவது தொகுதி இதுவாகும். கடனுதவி திட்டத்திற்குள் உள்வாங்காமல் 2022 பெப்ரவரியில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ள 40,000 மெட்ரிக்தொன் […]
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த பதவிவிலகுகின்றார்

ஜனாதிபதி – பிரதமருக்கிடையிலான இன்றைய சந்திப்பின் போது காபந்து அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 11 கட்சிகளின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புதிய பிரதமரை நியமித்தல் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அடங்கிய காபந்து அரசாங்கத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி அந்த இடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் […]
ஒரு டன் இரும்பு கம்பியின் விலை மீண்டும் 85,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாவாக காணப்பட்ட ஒரு டன் இரும்பு கம்பியின் புதிய விலை மூன்று லட்சத்து 39ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதற்கமைய முன்னர் 1,040 ரூபாவுக்கு விற்பனை செற்றப்பட்ட 10 மில்லிமீற்றர் கம்பியின் புதிய விலை 1,268 ரூபாவாகும். ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12 மில்லிமீற்றர் கம்பி தற்போது ஆயிரத்து 887 ரூபாவுக்கும் 2 ஆயிரத்து 725 ரூபாவுக்கு விற்கப்பட்ட 16 […]