இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந் துள்ளது. இதன்படி தற்போது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299.99 ரூபாவாகவும் கொள் வனவு விலை 289.72 ரூபாவாகவும் காணப் படுகின்றது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 299 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி […]
இலங்கை – ஓமானுக்கு இடையிலான வர்த்தக உறவு

இலங்கை தேசிய சம்மேளனத்தின் அழைப்பிற்கு அமைய ஓமானை சேர்ந்த வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தை சேர்ந்த உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று வருகை தந்திருந்தது. ஒமானை சேர்ந்த உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளமை இதுவே முதன் முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையேயான இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் என்பனவற்றை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். இது தவிர, இருநாடுகளின் தனியார் நிறுவனங்களை ஒன்றிணைத்து […]
இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 299 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 394 ரூபா 92 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 18 சதம் விற்பனை பெறுமதி 334 ரூபா 50 சதம். ஜப்பானிய […]
நிறுத்தி வைக்கப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 5% குறைந்ததன் காரணமாகப் பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முற்பகல் 10.32 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், முற்பகல் 11.02 மணிக்குப் பங்குச் சந்தை […]
இலங்கை மத்திய வங்கிக்கான புதிய ஆளுநர்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி வலிகியதை அடுத்து, அப்பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை தொடர்ந்து, புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் 7ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் […]
இலங்கையில் அவசரகால நிலைமை சர்வதேசம் அதிருப்தி

அவசரகால நிலைமை சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு சர்வதேசம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டுள்ளன. குறித்த டுவிட்டர் பதிவில் , ‘மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பினை வெளியிடுவதற்கான ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் நிலைமையை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேளை அவசரகால சட்ட நிலைமை […]
இலங்கைக்கு இந்தியா முதற்காலாண்டில் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி

ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த 40 000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடமிருந்து , வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று பெற்றுக் கொண்டிருந்தார். இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே […]