வெதுப்பக தொழிற்துறை பாரியளவில் பாதிப்பு!

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக வெதுப்பக தொழிற்துறை பாரியளவில் பாதிப்படைந்துள்ளது. நாளாந்த உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோகிராம் கேக்கின் விலை ஆயிரம் ரூபாவை விடவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நுகர்வோரின் எண்ணிகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]

அவசரகால சட்டம் நீக்கம்!

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (5) நள்ளிரவுடன் இல்லாதொழிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து […]

இன்று நாட்டை வந்தடையவுள்ள சமையல் எரிவாயு தாங்கிய கப்பல்!

எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிப்பு காரணமாக நாட்டில் மக்கள் தொடர்ந்தும் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர். 3,750 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது. அதேநேரம், 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பலும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. அந்த கப்பலில், 40,000 மெட்ரிக் டன் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]

டொலரின் விற்பனை பெறுமதி 300 ரூபாவை கடந்தது!

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று (5) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த நிலைமை தீவிரமான பொருளாதார சீரழிவுக்கான அறிகுறியாகும் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என […]

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான உறுப்புரை 4, அறிக்கை நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் குறித்த அறிக்கையினை முன்வைத்தார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையினை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னதாக கோரியிருந்தார். அதற்கு ஆளும் கட்சி இணக்கம் வெளியிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]

பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் அலி சப்ரி மீண்டும் பதவி விலகினார்!

புதிய நிதியமைச்சராக பதவி பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பதவி விலகியுள்ளார். அண்மையில் அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். இதனையடுத்து, முன்னதாக நீதியமைச்சராக பதவி வகித்துவந்த அலி சப்ரி நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் அவர் பதவி விலகியுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]

ஏப்ரல் 5 – 8 வரை ஆறரை மணித்தியால மின்வெட்டு

நாளை(05) தொடக்கம் எதிர்வரும் 08ஆம் திகதி வரை 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், ⭕ A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ⭕ P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய […]