அம்பத்தலை நிரப்பு நிலையத்துக்கு மட்டும் தொடர்ச்சியாக டீசல் வழங்குவது ஏன்?

ஜனாதிபதியின் நெருக்கமான அதிகாரியின் அழுத்தத்தினால் அம்பத்தலை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக டீசல் வழங்கப்படுவதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரின் மனைவிக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் விநியோகிக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரிகள் இவ்வாறு நெருக்கடி நிலையிலும் […]

ஒரு டொலரின் விற்பனை விலை ரூ.319ஐ தாண்டியது

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 319.99 சதமாகும். இலங்கை மத்திய வங்கி இன்று பதிவு செய்த டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 309.38 சதமாகும். இதேவேளை யூரோ ஒன்றின் விற்பனை விலை 352.20 ஆகவும், யூரோ ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 340.59 சதமாகவும் பிரிட்டிஷ் ஸ்டேர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 405.43 ஆகவும், ஒரு ஸ்டேர்லிங் பவுணின் […]

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 303 ரூபா 49 சதம். பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 399 ரூபா 70 சதம் யூரோ ஒன்றின் விற்பனை விலை 335 ரூபா 99 சதமாகும். இருப்பினும், அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310 ரூபா வரையும் பிரித்தானிய பவுண்டின் விற்பனை விலை 409 ரூபா வரையும் […]

எரிபொருள் விநியோக நடவடிக்கை தடையின்றி…

எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதாக தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள். இலங்கை தனியார் பௌசர் வாகன உரிமையாளர்கள் சங்கத்திற்கும் – கொலன்னாவை மசகு எண்ணெய் முனைய நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. சகல கோரிக்கைகளுக்குமான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறுவதாக தனியார் பௌசர் வாகன உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

கொரியாவின் முன்னுரிமை நாடுகளில் ஒன்றாக இலங்கை!

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொழில் ஒதுக்கீட்டை தென்கொரியா இரட்டிப்பாக்கியுள்ளதாக அந்த நாட்டு அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கூ யுன்-சியோல் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவர், அண்மையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்துள்ளார். மருந்து உற்பத்தி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கழிவுகளை அகற்றுதல், எரிசக்தி, தொழில்நுட்பம், தொழில் பயிற்சி மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார். தென் […]

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசேட விருந்தினருக்கான நுழைவாயிலை பயன்படுத்த சலுகை!

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதார்களுக்கு 5 வருட முதலீட்டாளர் நுழைவு அனுமதியினை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நேரடியாக முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், இலங்கைக்கு வரும்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விருந்தினருக்கான நுழைவாயிலை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இலங்கை முதலீட்டு சபை, முதலீட்டாளர்களுக்கான […]

நிருபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ நேற்று இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.25 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானமான EK-655 இல் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கிப் புறப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் பெண்டோரா பேப்பர்ஸ்களில் இடம்பெற்றுள்ளன. இது அண்மைய நாட்களில் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு […]