இலங்கையிலில் பணம் முதலிட்ட புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த துயர முடிவு

ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மணித்தியால தேடுதலின் பின்னர், ஒரு வருடமாக நீடித்த மர்மம் துலங்கியது. 58 வயதான அண்ணாமலை பழனி என்ற வர்த்தகரின் சடலமே கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டது. வர்த்தகரின் சடலம் பாயில் சுற்றப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டார். கொல்லப்பட்ட […]

புத்தாண்டிற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால், புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களைப் போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க […]

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் தற்போது விநியோகம்

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது. நாட்டில் சேதன மற்றும் உயிரியல் உர உற்பத்தியில் தற்சமயம் கணிசமான வளர்ச்சியை காண முடிவதாக செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார். இம்முறை உற்பத்தி செய்யப்பட்ட திரவ உரத்தின் அளவு ஒரு கோடி 30 லட்சம் லீற்றர்களுக்கு அதிகமாகும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய, முறையான ஒழுங்குறுத்தலுக்கு அமைய, ஒருசில உர வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்திக்கென 33 ஆயிரம் […]

பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத் தொழிற்றுறையில் பாதிப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் தமது தொழிற்றுறை மேலும் பாதிப்படைந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர். மின்துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என்பனவற்றால் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த தொழிற்றுறை குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்தும் இந்த நிலை நீடிக்குமானால், இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியினை சந்திக்கும். எனவே, இது தொடர்பில் அவதானம் செலுத்தி விரைவில் தீர்வு காண்பதற்கான காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத் தொழிற்றுறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]

இலங்கை மேலும் 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டது!

இலங்கை மத்திய வங்கி நேற்று நிதி சந்தையில் 119.08 பில்லியன் ரூபாவை சேர்த்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை நிதிச் சந்தையில் மத்திய வங்கியால் சேர்க்கப்பட்ட மொத்தத் தொகை 432.76 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும். இதன்படி, நேற்று முன்தினம் 1,656,691.82 ரூபாவாக இருந்த இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு கையிருப்பு நேற்று 1,772,497.21 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் உள்ளூர் சந்தையில் நாளாந்தம் புதிய நாணயங்கள் சேர்க்கப்படுவதால் இலங்கையில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு […]

கப்ரால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]

இலங்கை நிலவரம் குறித்து நியுசிலாந்து பிரதமர் தெரிவித்திருப்பது என்ன?

பொருளாதார நெருக்கடிகளிற்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதால் இலங்கை நம்பமுடியாத கொந்தளிப்பான காலகட்டத்தை அனுபவித்துவருகின்றது என நியுசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார். இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அவதானித்து வருகின்றேன் அவர்கள் கொந்தளிப்பான காலகட்டத்தை அனுபவிக்கின்றனர் இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைமை குறித்து வெளிவிவகார வர்த்தக அமைச்சிடமிருந்து தகவல்களை பெற காத்திருக்கின்றேன். நியுசிலாந்திற்கு ஏற்படக்கூடிய வெளிவிவகார கொள்கை பாதிப்புகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்தில் வெளிவிவகார அமைச்சிடமிருந்து தகவல்களை பெற காத்திருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் […]