வார இறுதியில் நாட்டுக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி வருகிறது

இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் 40, 000மெட்ரிக் டன் அரிசியின் முதல் தொகுதி இந்த வார இறுதியில் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குறித்த அரிசி, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பன, ஒரு கிலோகிராம், 110 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக […]
சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சுதெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குகின்றன. இந்த நிவாரணப் பொதி 1,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 […]
13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின் வெட்டு இல்லை!

சித்திரை புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். அத்துடன், நீர் மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நேற்று ஓரளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக இந்த வாரத்தை விட எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு காலம் மேலும் குறைக்கப்படும் என […]
யாழில் கொடுத்த கடனை வாங்கச் சென்ற பெண் கொலை

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் என்று சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபாய் பணம் வாங்க சென்ற போதே காணாமல் போயிருந்தார் என விசாரணைகளில் தெரிய […]
கையிருப்பு 1.93 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல் படி, நாட்டில் கடந்த மார்ச் மாதம் மீதமுள்ள உத்தியோகபூர்வ கையிருப்பு 1.93 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அத்துடன், மார்ச் மாதத்துக்கான வெளிநாட்டு ஒதுக்கம் 1.72 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதேபோல், கையிருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதி 29 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நாட்டில் பெப்ரவரி மாதம் கையிருப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அத்துடன், பெப்ரவரி மாதத்துக்கான வெளிநாட்டு ஒதுக்கம் 2.02 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதேபோல், இந்த மாதத்தில் கையிருப்பில் […]
நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபா இணைப்பு

இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்துள்ளது. இந்த ஆண்டில் நாளொன்றில் அச்சிடப்பட்ட அதிகூடிய பணத்தொகை இதுவாகும் என மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2022ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக உயர்வடைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக வீரசிங்க

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க… நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன… இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களும் நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம் சிறிவர்தன அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனக் கடிதங்கள் இன்று, (07) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டது. நிதித் துறையில் அனுபவமிக்க கலாநிதி வீரசிங்க அவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் […]