3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது

பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் விநியோகிப்பதற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசி, சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இவ்வார இறுதியில் 40,000 மெட்ரிக் தொன் அரசி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் குறித்த அரிசி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகா பெரேரா தெரிவித்தார். […]
இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இறுக்குகிறது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது. நிலையான வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி […]
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 321 ரூபா 49 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாக 88 சதமாக பதிவாகியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் […]
அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் இன்று

ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றைய தினம் செலுத்தப்படும் என நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏப்பிரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தையும் பண்டிகை முற்கொடுப்பனவையும் செலுத்துவதற்காக 9 ஆயிரத்து 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் கூறினார். ஏப்பிரல் மாத ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்காக திறைசேரி 2 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. சமுர்த்திக் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான 550 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் செயலாளர் பிறியந்த […]
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 1.72 பில்லியன் டொலராக வீழ்ச்சி; தங்க கையிருப்பு குறைந்தது!

மார்ச் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு, 1.93 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளில் இதனை அறியக்கூடியதாக உள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு, 2.3 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டிருந்து. இந்த நிலையில், கடந்த மாதத்தில் கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 2.02 பில்லியன் டொலராக காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கம், மார்ச் மாதம் 1.72 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், பெப்ரவரியில் 98 மில்லியன் டொலராக […]
சீனிக்கான வரி குறைக்கப்பட்டதால் நன்மையடைந்த தரப்பினர் குறித்து கணக்காய்வில் அம்பலம்

சீனி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்டிருந்த, விசேட பண்ட வரியை, 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்ததன் மூலம், பொதுமக்களுக்கு போதுமான நிவாரணம் கிடைக்கவில்லை என்பது கணக்காய்வாளர் மேற்கொண்ட விசேட கணக்காய்வில் தெரியவந்துள்ளது. அரச நிதி தொடர்பான குழு விடுத்த அறிவிப்பின் பிரகாரம், இந்த கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், நிதி அமைச்சினால் குறித்த விசேட பண்டவரி குறைக்கப்பட்டதுடன், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துக்கு அப்பால், இறக்குமதியாளர்கள் […]
அவசியமான மருந்துகள் தனியார் துறைவசம் கையிருப்பில்

அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாட்டின்றி தனியார் துறைவசம் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளர்களுக்கான தையல் இழைகள் மற்றும் இருதய நோயாளர்களுக்கான ஸ்டென்ட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். மருந்துப் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த […]