இலங்கையின் குடும்ப அரசியல் ஒரு பார்வை

இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் ராஜபக்ஷே குடும்பத்தினர் அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹம்பந்தோட்டாவை சேர்ந்தவர்கள். கோத்தபாய, சமல் மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர் அக்குடும்பத்தில் இருந்து வரும் மூன்றாம் தலைமுறை வாரிசுகள். சமல் மற்றும் மகிந்தவின் மகன்கள் முறையே சசிந்திரா மற்றும் யோசிதா, நமல் ஆகியோர் நான்காம் தலைமுறை அரசியல் வாரிசுகளாக களம் இறங்கியுள்ளனர். தெற்காசியாவில் இதுபோன்ற வாரிசு அரசியல் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. 2010-15 காலகட்டத்தில் இரண்டாவது முறையாக அதிபராக […]

250,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இம்மாதம் 265,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இறக்குமதியின் எரிபொருள் கையிருப்பு பராமரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக CPC இன் தலைவரான சுமித் விஜேசிங்க தெரிவித்தார். தற்போது, ​​CPC யின் சேமிப்பில் சுமார் 73,000 மெட்ரிக் தொன் எரிபொருள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மின்வெட்டு காரணமாக மக்கள் மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாலும், மக்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக பதுக்கி வைத்திருப்பதாலும், இந்த நாட்களில் எரிபொருள் நுகர்வு வேகமாக அதிகரித்து […]

இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்கான கடவுச்சீட்டு தயாரிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது போன்ற இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாடு செல்வதற்காக சொத்துக்களை விற்று பணம் திரட்டி வருவதால்,அண்மைக் காலமாக நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதேவேளை சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்லும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]

11ஆம், 12 ஆம் திகதிகளில் அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும்

எதிர்வரும் 11ஆம், 12 ஆம் திகதிகளில் சாதாரண வங்கி நடவடிக்கைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து வங்கிகளும் திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் […]

அடுத்த ஆறு மாதங்களில் 3 பில்லியன் டொலர் தேவை

எரிபொருள் மருந்துகள் உட்பட அத்தியாவசியபொருட்களை பெறுவதற்கும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி அடு;த்த ஆறு மாதங்களிற்கு தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 22 மக்களை கொண்ட இலங்கை தீவு தொடர்ச்சியான மின்துண்டிப்பு மருந்துகள் எரிபொருள் உட்பட ஏனைய பொருட்களிற்கு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை சீற்றமடைந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிக்கொண்டுவந்துள்ளதுடன் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தங்களை திணித்துள்ளது. இது மிகவும் கடினமான சவால் என நிதியமைச்சர் […]

சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக இழப்பீடு

கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி; சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க தெரிவித்தார். இந்த காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் தவணைக் கொடுப்பனவை அறவிடாமல் ஏக்கருக்கு 40,000 ரூபாவிற்கு உட்பட்டதாக 8,678 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதுடன், இதற்கென 21 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை 2022 ஆம் ஆண்டு […]

இரணைமடுக்குளத்தின் உதவியுடன் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளத் திட்டம்!

சரியான நீர் முகாமைத்துவத்தை அடிப்படையாக கொண்டு இரணைமடுக்குளத்தின் உதவியுடன் 16,211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதிகளவான நிலப்பரப்புகளை கொண்ட விவசாயிகள் தங்கள் நீர் பங்குகளை அதிகரித்துத் தருமாறு கோரியிருந்தனர். இதற்கமைய மேலதிகமாக 426 ஏக்கர் நிலப்பரப்பு இந்த நடவடிக்கைக்காக தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய தேவைகளையும் கணக்கிட்டு அதன்படியே விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். அந்த அடிப்படையில், […]