எதிர்வரும், 3 தினங்களுக்கு கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது

எதிர்வரும், 3 தினங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதிவரை இவ்வாறு கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் […]
இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதங்கள்! 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் 🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் […]
நாட்டில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி […]
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி

மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் மரக்கறிகளின் விலைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடுமையாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் மரக்கறிகளுக்கான கேள்வி குறைவடைந்ததையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதேவேளை,கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் தனது கடைக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மரக்கறிகளை நுகர்வோருக்கு இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் […]
லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனத்தினால் இதுவரையில் எரிவாயு விலை அதிகரிக்கப்படாத நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் 1311 என்ற இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 3,900 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று மாலைத்தீவில் இருந்து நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது. அதிலுள்ள எரிவாயுவை தரையிறக்கும் செயற்பாடுகள் […]
அதிக மழைவீழ்ச்சி. மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீரின் அளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றமையால் நீர் மின் உற்பத்திக்கு அது உதவும் என […]
இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1945 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைவடைந்து வருகின்றது. அதன்படி, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 166,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கத்தின் 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலையில் மாற்றம்! 10.04.2022 உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை […]