பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு கிடைத்த முதல் வெற்றி

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான முதலாவது சுற்று உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் ஒன்லைன் ஊடாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் சார்பில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியுடனான இந்த கலந்துரையாடல் சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான இந்த முதல் சுற்று பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அடுத்த வாரம் […]

கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி திடீர் வீழ்ச்சி

இலங்கையின் கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலருக்கு செலுத்தப்படும் ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாகவும் விற்பனை விலை 327.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. சந்தை ஆதாரங்களுக்கமைய, கறுப்பு சந்தை அந்நிய செலாவணி வர்த்தகர்களின் மாற்று விகிதம் ஒரு டொலருக்கு 350-360 ரூபாய்க்கு இடையில் காணப்பட்டுள்ளது. கறுப்பு சந்தையில் கடந்த […]

இலங்கைக்கு மீண்டும் உதவும் சீனா: 2.5 பில்லியன் டொலர்கள்

பொருளாதார நெருக்கடியால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு, சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் சீனாவின் அதிகாரிகள் இதற்கான உறுதியை அளித்துள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்தார். இதன்படி இலங்கை பெய்ஜிங்கில் இருந்து 1 பில்லியன் டொலர் கடனைப் பெற உள்ளது, இதன் மூலம் ஜூலையில் நிலுவையில் உள்ள சீனக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும், அத்துடன் ஆடை ஏற்றுமதித் தொழிலுக்குத் தேவையான பொருட்களை 1.5 […]

வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இலங்கை இடைநிறுத்தம்!

வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தம்! நிலுவையில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட சாதாரண வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிறுத்துவதாக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குத் தேவையான மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு […]

இலங்கையில் பொருளாதார நெருக்கடி. இந்திய ஆடைத் தொழில் துறைக்கு சாதகம்

இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால், இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆடைகளுக்கான முன்பதிவுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில், திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 33,525 கோடி இந்திய ரூபாவாக பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், உலக அளவில் இந்திய தைக்கப்பட்ட ஆடைகளின் பங்களிப்பு 4 சதவீதமாகவும், இலங்கையின் […]

புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி!

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தை காட்டிலும், மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில் பட்டாசு மற்றும் கேளிக்கை வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணிகளால் பொதுமக்களின் பட்டாசு கொள்வனவு குறைவடைந்துள்ளதாக அவர்கள் […]

டொலரின் விற்பனை பெறுமதி உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றை 330 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. இதேவேளை, கொழும்பு பங்குப் பரிவரித்தனை நடவடிக்கைகள் இன்றும், நாளையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரிவர்த்தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]