கிளிநொச்சியில் எரிபொருள் விற்ற இருவர் கைது

கிளிநொச்சி – தர்மபுரம் மற்றும் விஸ்வமடு பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 279 லீற்றர் பெற்றோல், 605 லீற்றர் டீசல் மற்றும் 300 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 38 மற்றும் 44 வயதான இருவரே குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]

லிட்ரோ எரிவாயு முனையத்துக்கு புத்தாண்டு விடுமுறை

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையத்தை 5 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு குறித்த முனையத்தின் பணிகள், இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோக முனையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுமென லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]

போராட்டங்கள் நடத்தப்படுவதால் பயனில்லை. முரளி

போராட்டங்கள் நடத்தப்படுவதால் பயனில்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போராட்டங்கள் இடம்பெறுவதனால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரமாட்டார்கள். இதனால், வருமான இழப்பு ஏற்படும். எனவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கைவிட்டால், சுற்றுலாப் பயணிகள் வருவதன்மூலம், நாட்டுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படும் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அல்லது எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும், இந்தப் பிரச்சினைகளைத் […]

அரசாங்கம் உடனடி தீர்வினை வழங்க முன்வர வேண்டும் – ஏற்றுமதி அமைப்புக்கள்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தாம் எதிர்நோக்கும் பின்னடைவுகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வினை வழங்க முன்வர வேண்டும் என அதிக வருவாயினை பெற்றுதரும் ஏற்றுமதி அமைப்புக்கள் கோரியுள்ளன. முன்னணி 6 ஏற்றுமதியாளர்கள் வருடாந்தம் பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் அமைப்புக்களுடன், மேலும் 17 அமைப்புக்களும் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. தற்போது நாட்டில் உள்ள பிரச்சினை காரணமாக வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் இலங்கை ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக அவர்கள் […]

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

புறக்கோட்டை மற்றும் தம்புள்ளை பொருளாதார மையங்களில், மரக்கறிகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. போஞ்சி, தக்காளி, கத்தரிக்காய், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழக்கு என்பனவற்றின் விலைகள், கடந்த 8ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினத்தில் அதிகரித்துள்ளன. புறக்கோட்டை பொருளாதார மையத்தில், 260 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் போஞ்சி, நேற்றைய நாளில், 360 ரூபாவாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மையத்தில் 145 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் போஞ்சி, நேற்றைய […]

டொலரின் விற்பனை பெறுமதி 330 ரூபா வரை உயர்வு!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 20 சதமாகவும், விற்பனை பெறுமதி 330 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது. அவ்வாறே, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 431 ரூபா 27 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 05 சதம் விற்பனை பெறுமதி 361 ரூபா 83 சதமாகவும், சுவிஸ் […]

விரும்பிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கல்

வர்த்தகர்கள் தாங்கள் விரும்பிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகர்கள் தாங்கள் நினைத்த விலைகளில் பொருட்களை விற்பனை செய்கின்றனர் எனவும் நுகர்வோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெற்கு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. சந்தையில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அமைச்சரவையினால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, காப்புறுதி கட்டணங்கள், […]