கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு

இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதேநேரம், 36அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு நீர்பாசனக் குளத்தின் நீர்மட்டம் 35அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரணைமடு நீர்பாசனக் குளத்தின் தாழ் நில பகுதியில், வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை பாரதிபுரம், பொன்னகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர், மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. அந்த […]
ஃபிட்ச் ரேட்டிங் மேலும் குறைத்துள்ளது

ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடனை மீள செலுத்தும் திட்டம் வரையப்படும் வரையில், வெளிநாட்டு கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியுள்ளமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதற்கமைய, ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை C நிலைக்கு தரம் குறைத்துள்ளது. முன்னதாக, எஸ்.என்.பி எனப்படும் ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் நிறுவனமும் இலங்கையை CCC நிலையில் இருந்து […]
இலங்கை, பாக்கிஸ்தான் கடன்கள் அதிகரிக்கின்ற நிலையில் – சீனா காப்பாற்ற தயங்குகின்றது

சீனா அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தன்மீது தங்கியிருப்பதை உறுதி செய்வதற்காக கடன்பொறிறை பயன்படுத்துகின்றது என அமெரிக்கா கடந்த சில வருடங்களாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்துள்ளது. எனினும் இலங்கை- பாக்கிஸ்தான் ஆகிய சீனாவின் இரண்டு நாடுகளும் மிகமோசமான நிதிநிலைமையை எதிர்கொள்வது ஜனாதிபதி ஜிஜின்பிங்கின் அரசாங்கம் காசோலையை பயன்படுத்துவதற்கு தயங்குவதை வெளிப்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தான் கடந்த மார்ச் செலுத்திய 4 பில்லியன்டொலர்களிற்காக மீண்டும் கடனை வழங்குவோம் என்ற உறுதிமொழியை சீனா இன்னமும் நிறைவேற்றவில்லை,இலங்கையின் 2.5 டொலர் உதவி குறித்தும் சீனா இன்னமும் […]
சர்வதேச நாணயநிதியத்துடன் 18 ம் திகதி பேச்சுவார்த்தைகள்

சர்வதேச நாணயநிதியத்துடன் 18 ம் திகதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்- நிதியமைச்சர் சர்வதேச நாணயநிதியத்துடன் ஏப்பிரல் 18 ம் திகதி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதாரத்திற்கு அவசியமாகவுள்ள 4 பில்லியன் டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 4 பில்லியன் டொலர் உதவியை பெற சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை EXCLUSIVE: Sri Lanka's new finance minister, Ali Sabry, says the country […]
விவசாயத்தை ஊக்குவிக்க யோசனை

விவசாயத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தாமதிப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை செலுத்தும் என இலங்கை விவசாய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறுகிய கால திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளாவன… அவசியமான உரம் மற்றும் கிருமிநாசினியை வழங்குதல் விவசாயிகளுக்கான தேசிய திட்டத்தை செயற்படுத்துதல் துறைசார் நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் […]
தெங்கு ஏற்றுமதி மூலம் 836 மில்லியன் டொலர் வருமானம்

கடந்த வருடத்தில் மாத்திரம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக 836 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 05 வருடங்களுக்குள் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானத்தை 1.5 மில்லியன் டொலராக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனூடாக நாடு எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை வெற்றிகொள்ள முடியுமென கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]
மீண்டும் கோதுமை மா விலை அதிகரிப்பு

சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் குறிப்பிட்டனர். கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளது. கோதுமை மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், வௌி மாவட்ட சந்தைகளில் […]