வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் நீக்கம்!

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்தவாரம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி, உந்துருளிகளுக்கு 1,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன், மகிழுந்துகள், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 5,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவிருந்தது. எவ்வாறிருப்பினும், பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக […]
இலங்கைக்கு உதவி வழங்குங்கள், IMF நிதியத்திடம் இந்திய வேண்டுகோள்

இலங்கைக்கு உடனடியாக உதவி வழங்குங்கள் – சர்வதேச நாணயநிதியத்திடம்இந்திய வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவி வழங்கவேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இன்று கிறிஸ்டலீனா ஜோர்ஜீவாவை சந்தித்தவேளை இலங்கையின் தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு சர்வதேச நாணயநிதியம் விரைவில் நிதிஉதவி வழங்கவேண்டும் என்ற இலங்கையின் கோரிக்;கையை இந்திய நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு […]
இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை அதிகரித்துள்ளன. இதன்படி தற்போது இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகள் இதோ இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் பின்வருமாறு 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 338 ரூபாய், 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய், ஒடோ டீசல் ஒரு லீற்றர் – 289 ரூபாய், சூப்பர் டீசல் ஒரு […]
தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

நாட்டின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பல பிரதேசங்களில் தனியார ் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவரை அதிகரிக்கக்கூடும் என […]
கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 40 ரூபாவால் அதிகரித்து விற்பனை செய்வதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக ப்றீமா நிறுவனம் தெரிவித்துள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! […]
இரசாயன உர இறக்குமதி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள தனியார்துறையினர்!

சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனியார்துறை இறக்குமதியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பான முதல்கட்டப் பேச்சுவார்த்தை இன்று விவசாய அமைச்சில் நடைபெறவுள்ளது. விவசாய உர இறக்குமதிக்காக வழங்கப்படவிருக்கும் நிவாரணம் பற்றி இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு சிறுபோகத்தில் நிவாரண விலையில் உரத்தை வழங்க முடியும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி […]
அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகாிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 72 சதமாகவும், விற்பனை பெறுமதி 334 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது. அவ்வாறே, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 423 ரூபா 68 சதம். விற்பனை பெறுமதி 438 ரூபா 67 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 365 ரூபா 04 சதமாகவும், சுவிஸ் […]