பாண் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டார். இதனிடையே, உணவுப்பொதிகளின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20 ரூபாவால் உணவுப்பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். மரக்கறிகள் மற்றும் உணவு தயாரிப்பிற்கான அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த தீர்மானம் […]
பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிப்பு

இன்று(19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார். பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டாவிடம் வினவியபோது, தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, பஸ் கட்டணத்தை […]
கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்த தீர்மானம்

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இலங்கை Caa2 மட்டத்திலிருந்து Ca தரத்திற்கு தாழ்த்தப்பட்டுள்ளது. வௌிநாட்டு கடனை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு Moody’s நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் […]
பங்கு சந்தை இடைநிறுத்தம் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்!

கொழும்பு பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியமை பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் விடயம் என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பமான காலப்பகுதியினில், திடீர் என கொழும்பு பங்கு சந்தை மூடப்பட்டமையால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் திட்டமிட்ட வகையில் பங்குகளை பெறவோ அல்லது அவற்றை விற்பனை செய்வதற்கோ வசதிகள் மறுக்கப்படுவதனால், பாதிப்படைபவர்கள் தமது நிதி செயல்பாட்டினை உரிய […]
டொலரின் பெறுமதி மேலும் அதிகாிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா50 சதமாகவும், விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது. அவ்வாறே, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 51 சதம். விற்பனை பெறுமதி 443 ரூபா 67 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 369 ரூபா 33 சதமாகவும், சுவிஸ் பிராங் […]
உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பு

உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். இதற்கமைய ஃரைட் ரைஸ், கொத்து மற்றும் சோறு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுகளை பொதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே இந்த தீர்மானம் […]
19ஐ அமுல்படுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு

19ஆவது திருத்த சட்டத்தை சில திருத்தங்களுடன் மீள அமுலாக்குவது தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அமையுமென தாம் நம்புவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார். அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தற்போதைய நிலையை வெற்றி கொள்வதற்கு பொருளாதார முகாமைத்துவம் அவசியமாகும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, […]