இலங்கையில் பல வங்கிகள் மூழ்கும் அபாயம், ரணில்

நாட்டிலுள்ள வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கியாளர்களின் விசேட மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருந்தார். இதேவேளை நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி […]
பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு என்ன செய்யலாம்?

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளாகவும் யாப்பு நெருக்கடிகளாகவும் மாறியுள்ளன. தென்னிலங்கையில் ஏற்பத்துள்ள அரசியல் ஸ்திரமின்மை தொடர்பாக தமிழ்த் தரப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இது விடயத்தில் தமிழ்த் தரப்பு முடிவெடுப்பதாக இருந்தால் முதலில் தென்னி லங்கையில் இடம்பெறும் கொந்தளிப்புகள் தொடர்பாக ஒரு சரியான படத்தை பெறவேண்டும். தென்னிலங்கையில் நான்கு பரப்புக்களை நோக்கி தமிழ் தரப்பு கவனத்தை குவிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது நாடாளுமன்றம். இரண்டாவது காலிமுகத்திடல்.மூன்றாவது பௌத்த மகா சங்கங்கள்.நாலாவது அரசாங்கத்துக்கு உதவ முற்படும் […]
இலங்கை பேச்சுவார்த்தை குறித்து IMF கருத்து

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் உதவ தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் காத்திரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா சீனா நாடுகளின் நிதியுதவி பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் அதிகாரிகளுடன் நிதியுதவி பெறுவது தொடர்பில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கடன்களை மறுசீரமைப்பதற்கு தேவையான ஆலோசகர்களை நியமிக்க சுமார் மூன்று வாரங்கள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார். வாஷிங்டனில் ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு ,நிதி அமைச்சர் அலி சப்ரி அளித்த அளித்த பேட்டியில் , நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய 15 முதல் 20 நாட்கள் தேவைப்படுவதாக […]
மீன் வளர்ப்பு முறைமையை விருத்தி செய்ய திட்டம்!

நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் தொட்டிகளில் மீன் வளர்க்கும் முறைமையினை விருத்திசெய்து மொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவற்றிற்கான ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய விகாரங்களுக்கான பிரிவின் இலங்கை மற்றும் மாலைத்தீவு பிரதிநிதி விம்லேந்திரா ஷாரன் உடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, கடற்றொழில் […]
ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவில் வீழ்ச்சி!

கடந்த மார்ச் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 23.17 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25.81 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பொதி செய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதி பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் இலங்கை தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. […]
இலங்கையின் சுற்றுலா அபிவிருத்திக்கான உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை

இலங்கையின் சுற்றுலா அபிவிருத்திக்கான உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து, சிறிய அளவிலான சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா மதிப்பிலான மூன்று மானிய உதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 60 சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்களில் உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]