இலங்கைக்கான கடன் கட்டுப்பாட்டை இறுக்கமாக்கும் சர்வதேச எண்ணெய் விநியோக நிறுவனம்!

ஐக்கிய அரபு இராட்சியத்தை சேர்ந்த பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு பாரிய கடன் அழுத்தத்தை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராட்சிய நிறுவனத்திடம் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவிற்கே இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றுக்கான கடன் வழங்கலை இலங்கை அரசாங்கம் பிற்போட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிறுவனம் 95,000 மெட்ரிக் டன் எண்ணெய்யை இலங்கைக்கு விநியோகித்து அதற்கான […]
எரிபொருளுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களில் எரிபொருள் ஏற்றிய அதிகமான கப்பல்கள் வரவுள்ளதால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டும் அடுத்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]
கட்டட நிர்மாண பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கட்டட நிர்மாணத்திற்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் நிர்மாணப் பணிகள் 75% வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணப் பணிகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது. ஒரு கியூப் மணலின் விலை 8000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணப் பணிகளுக்கான சங்கத்தின் தலைவர் M.D.போல் குறிப்பிட்டார். இரும்புக் கம்பிகளின் விலை இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், நாடளாவிய ரீதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்பு இல்லாது போயுள்ளதாக M.D.போல் […]
இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பின்னடைவு!

இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், முந்தைய கணிப்பினை விட மெதுவாக செயல்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வருடத்தில் இரு முறை உலக வங்கியினால் வெளியிடப்படும் பிராந்திய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று 2023ஆம் ஆண்டில் 6.3 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை பற்றி குறிப்பிடுகையில், பொருளாதாரம் நம்பத்தக்க வகையில் […]
சில பகுதிகளில் உள்ளூர் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் உள்ள சந்தையில் உள்ளூர் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ உள்ளூர் சம்பா அரிசியின் விலை சுமார் 280 ரூபாவாக அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், ஒரு கிலோ உள்ளூர் சம்பா அரிசி 220 ரூபாவிற்கு அரிசி ஆலைகளால் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விலை உயர்வால் உள்ளூர் சம்பா அரிசியை வாங்கும் நுகர்வோருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் […]
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்கு தயார்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்கு தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது. நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து சர்வதேச நாணய நிதியம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அத்துடன், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக ஏனைய அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்பட […]
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும்

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்தார். எவ்வாறாயினும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது கட்டுப்பாட்டு விலையை மீள அமுல்படுத்துவதில் தடையாக உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் நிதி அமைச்சருடனான சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் குணபால […]