பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை

உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் முறையாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது வெனிசுலாவை தாண்டி மூன்றாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. பெப்ரவரி மாதம் 17.50 வீதத்தில் இருந்த இலங்கையின் பணவீக்கம் மிக உச்சத்தை இந்த மாதம் பதிவு செய்துள்ளது. அதற்கமைய கடந்த 21ஆம் திகதி வெளியான பட்டியலுக்கு அமைய இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 119 சதவீதத்தை எட்டியுள்ளது. இதேவேளை, அமெரிக்க பொருளாதார வல்லுநர் […]

கொழும்பு பங்குச் சந்தை செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன

கொழும்பு பங்கு சந்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய நாள் முழுவதும் அது மூடப்படும் எனவும் கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. ஷ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் ஸ்ரீலங்கா 20 (S&P SL20) சுட்டெண் முன்னைய முடிவில் இருந்து 10%க்கு மேல் குறைந்துள்ளது. முன்னதாக, இன்று காலையில் S&P SL20 சுட்டெண் முன்னைய முடிவில் இருந்து 5%க்கு மேல் சரிந்ததால், இன்று காலை கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வழக்கமான வர்த்தகம் 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. எனினும் முற்பகல் 10.31 மணிக்கு […]

தங்கத்தின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25 சென்ட்களாக உள்ளது. மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல இலங்கையில் ஒரு பவன் 24 கரட் தங்கத்தின் விலை184,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம் 22 கரட் தங்கப் பவன் ஒன்று 169,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், ஒரு பவன் 21 கரட் தங்கத்தின் விலை 169,300 ரூபாவாக […]

இன்றைய (25) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இன்றைய (25) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

தேயிலை உற்பத்திக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தினால் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தேயிலை உற்பத்திக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேவையான அளவு எரிபொருள் கிடைக்கப்பெறாமை காரணமாக தேயிலை விநியோகத்தில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அதன் பேச்சாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார். அத்துடன் மின் துண்டிப்பு காரணமாக சில தொழிற்சாலைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேயிலை இறக்குமதிக்காக ரஷ்யாவில் இருந்து உரத்தினை கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. யூரியா மெற்றிக் டன் 30,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில், தற்போது 25 மடங்காக அதிகரித்து […]

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில்….

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, அவ்வாறான போலியான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் […]

மருந்துப் பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்வு

மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையின் காரணமாக தற்போது மருந்துப்பொருட்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இன்னும் 12 வாரங்களில் கையிருப்பில் உள்ள மருந்துப்பொருட்கள் நிறைவடையும் என்பதால் பாரிய பாதிப்புக்களை […]