நாளாந்த பங்குச் சந்தை இன்றும் இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்றும் மீண்டும் இடைநிறுப்பட்டுள்ளது. S&P SL20 சுட்டெண் விட 7.5% குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முற்பகல் 11.02 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் முற்பகல் 11.32 மணிக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]
தனியாக எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி!

பொருளாதார செயன்முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விசேடமான துறைகள், தமக்குத் தேவையான எரிபொருட்களை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், பெற்றோலிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாட்டின் சகல பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிபொருள் இன்றியமையாதது என்பதன் அடிப்படையில், குறிப்பிட்ட துறைகளுக்கு மாத்திரம் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், தனித்தனியாகப் பயன்படுத்துவதற்கும் உரிமம் வழங்குவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, […]
சீமெந்து விலை 400 ரூபாவால் அதிகரித்தது!

50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர் இந்த விலை அதிகரிப்பானது நாளை(26) முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி […]
டொலரின் விற்பனை பெறுமதி 350 ரூபா

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவித்தலின்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 333.88 ஆகவும், விற்பனை பெறுமதி 346.40 ஆகவும் பதிவாகியுள்ளது. டொலரின் விற்பனை பெறுமதியானது 350 ரூபாவை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 […]
விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2,500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும், அந்த விலை […]
மின்சார கட்டணம் 100 வீதத்தால் அதிகரிப்பு

மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக அறியமுடிகின்றது. மின்சார கட்டண அதிகரிப்பு விவகாரம் – மின்சக்தி அமைச்சர் வெளிப்படுத்திய விடயம்! இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டண திருத்தங்கள் […]
சீன – இலங்கை திறந்த பொருளாதார ஒப்பந்தம்

சீன – இலங்கை திறந்த பொருளாதார ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளில் இலங்கை அதிக நன்மையை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என சீனா எதிர்பார்க்கின்றது. இதன்மூலம் மேலதிக முதலீட்டாளர்களை கவர முடியும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி […]