இலங்கையின் பொருளாதார பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிப்பு!

இலங்கையின் பொருளாதார பணவீக்கம் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மார்ச் மாதம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருட இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.1 சதவீத அதிகரிப்பு என பதிவாகியுள்ளது. இந்த நிலையில், உணவுகளின் பெறுமதி கடந்த மார்ச் மாதத்தில் 29.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலை தொடர்ந்தும் நிலவுமானால் உணவு பொருட்களின் விலை ஏற்றம் மேலும் […]
வெளிநாட்டு கடன் மதிப்பீடு மட்டத்தில் இருந்து இலங்கை தரமிறக்கம்

ஸ்டேன்டர்ட் என்ட் புவர் க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்தாமையால் இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய தரவுகளின் அடிப்படையில் இலங்கை சிசி மட்டத்தில் இருந்து எஸ்.டி நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என […]
மரக்கறி விநியோகத்திற்கு தடை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் முழு அடைப்பு போராட்டம் நடாத்த திட்டமிட்டுள்ள நிலையில், கையிருப்பிலுள்ள மரக்கறிகளை 28ஆம் திகதி அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானம்,கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட பல பொருளாதார நிலையங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அகில இலங்கை விசேட பொருளாதார […]
100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு வதிவிட விசா!

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதேவேளை, கூட்டு ஆதனங்களின் பெறுமதி 75,000 டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கும் நீண்ட கால வதிவிட விசா வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள […]
இலங்கை நெருக்கடியில் இருந்து மீளுவது தொடர்பில் IMF வழங்கிய தகவல்!

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு மற்றும் நெகிழ்வுடனான நாணயமாற்று அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இணையம் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கை அதிகாரிகளுடன் கடந்த வாரம் பயனுள்ள தொழிநுட்ப ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு நாணய கொள்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும். நெகிழ்வான மாற்று விகிதங்கள் தேவை […]
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையும்!

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது. இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னராக தெரிவித்திருந்தார். கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். குறித்த சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள […]
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சிறு அளவில் அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com […]