ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷ்யா

போலந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா இன்று(27) நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நட்புறவற்ற நாடுகள் எரிவாயுவிற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களில் (Rouble) செலுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் விநியோக நடவடிக்கைகள் குறைக்கப்படும் என ரஷ்யா அறிவுறுத்தியிருந்தது. எனினும், அவ்வாறு பணம் வழங்குவதற்கு குறித்த இரு நாடுகளும் மறுத்துவிட்டன. போலந்து 53 வீதமான எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்ததுடன் பல்கேரியா 90 வீதமான எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்றுக் கொண்டது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]

இன்றைய (26) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்க உலக வங்கி இணக்கம்

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (26) பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மருந்து மற்றும் சுகாதாரத் தேவைகள், சமூகப் […]

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (26) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,860 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 1,945 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 910 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், […]

நான் பதவி விலக மாட்டேன்

தான் ஒரு போதும் பதவி விலகப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (26) இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, உரையாற்றிய பிரதமர் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதையும், வரிசையில் நிற்கும் முறையையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில் வரிசைகளை இல்லாதுசெய்ய முடியும் […]

ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்தவுள்ள இலொன் மஸ்க்

உலகின் செல்வந்தரான இலொன் மஸ்க்(Elon Musk), 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யவுள்ளார். பங்கொன்று 54.20 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் 44 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்வதற்கு ட்விட்டர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. 273 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இலத்திரனியல் வாகன தொழிலதிபராகவும் SpaceX எனும் விண்வெளி நிறுவன தலைவராகவும் அறியப்பட்டு வந்த Elon Musk, தமது நிறுவனங்களின் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் தற்போது இணைத்துக் கொண்டார். […]

கடனை மீள செலுத்த தவறும் நாடாக இலங்கை

Standard and poor’s (S&P) சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனம், தெரிவு செய்யப்பட்ட கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளது. 2023 ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடையவுள்ள இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 30 நாள் கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் அதனை செலுத்தத் தவறினால் தரப்படுத்தரில் D மட்டம் வரை இலங்கை தரமிறக்கப்படலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. D மட்டம் என்பது கடனை செலுத்தத் தவறும் […]