நாமலுக்கு எதிரான கறுப்புப் பண சுத்திகரிப்பு வழக்கு

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான வழக்கு சாட்சி விசாரணைகளுக்காக திகதி குறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு வியாழக்கிழமை ( 28 ) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி […]
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும்

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வரை நகரங்களுக்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும் என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் தினசரி 80,000 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை 30,000 ஆக குறைந்துள்ளது. அத்துடன் தற்போது 27 சதவீதமான நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள். மேலும், தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு, எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 […]
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு

சமனலவெவ நீர்த்தேக்கப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழை காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில மாதங்களாக நீர்த்தேக்கப் பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதும் நீர் மட்டம் குறைவதற்கு மற்றொரு காரணமாகும். நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், சமனல வெவவின் இரு புறமும் உள்ள காணிகளில் சிலர் […]
திரிபோஷ உற்பத்தி 3 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து லங்கா திரிபோஷ நிறுவனத்திடம் வினவியபோது, மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]
பொருட்களின் விலையேற்ற வேகம் 140% வரை அதிகரிப்பு

ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் 60 வீதத்தில் இருந்து 140 வீதம் வரை அதிகரித்துள்ளன. பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் மாத்திரம் உணவுப்பொருட்களின் விலையேற்றம் அல்லது உணவிற்கான பணவீக்கம் 29.5 ஆக அமைந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் வரை, நாட்டில் பணவீக்கம் எனப்படும் பொருட்களின் விலையேற்ற வேகம் 10 வீதத்தை விடவும் குறைவாகவே அமைந்திருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் ஒரு […]
ரஷ்யாவுடன் ரூபிளில் வர்த்தகம் செய்ய 10 ஐரோப்பிய நாடுகள் இணக்கம்

ரஷ்யா – உக்ரைன் போர் 64 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டொலருக்கு பதிலாக ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி செய்வதால், இந்த அறிவிப்பு […]
ஒரு மூடை யூரியா 40 ஆயிரம் ரூபா; ஒரு கிலோ 800 ரூபா

உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூடை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உர விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த அளவே உரம் கிடைப்பதாகவும், மிக அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். உர நிறுவனங்கள் காசுக்கு மட்டுமே உரம் வழங்குவதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். அதன்படி தற்போது யூரியாவின் விலை கிலோ ரூ.800 ஆக உள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள […]