யாழ். மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் மாத்திரமே கைவசம் உள்ளதாகவும் இதனால் தற்காலிகமாக சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமக்கு கிடைத்துள்ள மருந்து வகைகளை சிக்கனமாக உபயோகிப்பதாகவும் புற்றுநோய் சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மயக்க மருந்து, சத்திரசிகிச்சையில் அதிகமாகத் […]

காலி எரிபொருள் சம்பவம் குறித்தும் விசாரணைகள்

எரிபொருள் இறக்குமதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது முதல், அதன் விநியோகம் வரையில் நான்கு கட்டங்களில் அதன் தரம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விநியோகிப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் தரம் பற்றி சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சு அறிவித்துள்ளது. காலி எரிபொருள் விநியோக நிலையம் ஒன்றில் விநியோகிக்கப்பட்ட எரிபொருளின் தரம் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எரிபொருள் நிரப்பும் நிலையத்திலுள்ள எரிபொருள் விநியோக தாங்கியில் நிரம்பியிருந்த நிலத்திற்கு கீழ் நீர் அகற்றப்படாது […]

தெங்கு உற்பத்தி உயர்வான மட்டத்தினை எட்டியுள்ளது

கடந்த வருடம் தெங்கு உற்பத்தியானது, வரலாற்றிலேயே உயர்வான மட்டத்தினை எட்டி உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெங்கு உற்பத்தி 2020 ஆம் ஆண்டு பதிவாகிய 9.5 சதவீதுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 11.7 சதவீத வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிகரிப்பானது, முக்கியமாக தெங்கு பயிரிடப்படும் பகுதிகளில் நிலவிய சாதகமான காலநிலையில் ஏற்பட்ட மாற்றமாகும் என தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு துருவல் தேங்காய் உற்பத்தி 31.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

இறப்பர் உற்பத்தி தொடர்ந்தும் வீழ்ச்சி

இறப்பர் உற்பத்தி கடந்த ஆண்டு முதல் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்கசு நோய்ப்பரவலுடன் இணைந்து பால் சேகரிப்பு நாட்களின் போது பெருந்தோட்டப் பிரதேசங்களில் நிலவிய மழைவீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2020 இல் இறப்பர் உற்பத்தி செய்யப்பட்ட 78.2 மில்லியன் கிலோகிராமாக காணப்பட்டது. இது 2021 இல், 1.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 76.9 மில்லியன் கிலோகிராம்களாக பதிவானதென மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்த இறப்பர் உற்பத்தியின் ஏறத்தாழ […]

லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற போலியான செய்திகளை பதிவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]

குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆம், 6ஆம் மற்றும் எதிர்வரும் 9ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளன. அத்துடன், கடந்த 5ஆம் […]

92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் இலங்கை அறிவிப்பு

92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிவித்துள்ள சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவு, கடந்த 5ஆம் திகதி மாத்திரம் நாடளாவிய ரீதியில் 472 தாங்கிகள் மூலம் 60 இலட்சம் லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிபொருளின் தரம் தொடர்பில் 0115 234 234 மற்றும் 0115 455 130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, நுகர்வோர் முறைப்பாடுகளை […]