சகோதரர்கள் இருவரும் வண்டிக்குள் சிக்கிய நிலையில் பலி

இன்று (23) குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டி ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் இந்த ஜீப் வண்டி வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குளியாப்பிட்டியவில் இருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த பகுதி எனவும், தற்போதைய விசாரணைகளின் படி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. […]

இவரைக் கண்டீர்களா..?

அங்கொடை, களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளதக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 077 776 6582 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சிறுமி கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் வீதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு […]

இலங்கை வங்கித் துறைக்கு சாதகமான சூழல் – ஃபிட்ச் ரேட்டிங்!

வெளிநாட்டுக் கடன்கள் ஊடான அழுத்தங்கள் குறைக்கப்படும் போது, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் எனவும், ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வங்கிச் செயற்பாடுகள் கடந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தன. எனினும் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் விளைவால் ஏற்படுகின்ற இறையாண்மை அழுத்தக் குறைப்பின் காரணமாக, வங்கிகளின் செயற்பாட்டுச் சூழ்நிலை இலகுபடுத்தப்படும். […]

ரஜினிகாந்த் அடுத்த காமெடி பீஸ்!

தமிழ் சினிமாவில் 120 படங்களுக்கும் மேல் நடித்தும் 60 சீரியல்களில் நடித்தும் 2,500 மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமாகியவர் கவிதாலயா கிருஷ்ணன். பொய்க்கால் குதிரை என்ற படத்தில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமாகிய கிருஷ்ணன், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கமல், ரஜினி பற்றிய ஒருசில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், கமல் ஹாசனை தமிழ் சினிமா கொண்டாடவில்லை. அவர் நம்முடைய பொக்கிஷம். அடுத்த தலைமுறையினர் ரஜினிகாந்தையே மறந்துவிடுவார்கள். அவருக்கு விழா […]

திருமண முறிவு குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உருக்கமான பதிவு!

தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாக ஏ.ஆர். ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார். மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் எக்ஸ் தள பக்கத்தில் தனது விளக்கத்தை பதிவு செய்தார். அதில், தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார். கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், இதய […]

யாழ் ஊசி கட்சி MP நாடாளுமன்றில் இருந்து விலக்கப்படுவார்

யாழ் ஊசி கட்சி MP விரைவில் நாடாளுமன்றில் இருந்து விலக்கப்படுவார். நாடாளுமன்ற சேவியர்களுடன் முதல் நாளே தான் MP என்று மோதியாச்சு! அடுத்த கட்டம் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்ற தெரியாத காரணம் மற்றும் சட்ட திட்டங்களை சரியாக விளங்கி புரிந்து நடக்கத் தெரியாது என்று தடை உத்தரவு வரும் . அப்போது அவரின் தங்கம் கௌசல்யா MP யாக போகும் வாய்ப்பு விரைவில் வரும் என்பதை ஒரு எதிர்வு கூறலாக தருகிறேன். என்னவொரு கோமாளியை வடக்கு மக்கள் […]

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார் […]