இலங்கையின் வன்முறை கடனடைக்கும் நடவடிக்கையை கடினமாக்கியுள்ளது

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்காளிகளின் இலக்குகளை அடைந்து கொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உடனடி பொருளாதார மீட்சியின் பாதையில் இவை தாக்கம் செலுத்துவதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை கவலையளிப்பதாகவும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]

இலங்கையின் தொடர்பில் அமெரிக்கா அவதானம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ், வொஷிங்கடனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கை மக்கள் முகங்கொடுத்து வரும், உணவு, மின்சாரம், மருந்து மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். […]

மத்திய வங்கி ஆளுநருடன் சஜித் அவசர சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் உடனிருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நெருக்கடியை சமாளிக்க தனது கட்சி எப்போதும் ஆதரவை வழங்குமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

ராஜபக்ஷ நினைவுத் தூபி சேதமாக்கப்பட்டது

ராஜபக்ஷக்களின் பெற்றோர்களான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தோன தந்தினா ராஜபக்ஷ ஆகியோரின் நினைவாக மெதமுலனவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுதூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் முழுவதும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் பல வீடுகள் தாக்கப்பட்டதுடன், சில வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூபிகளை நிர்மாணிப்பதற்கு சுமார் 33.9 மில்லியன் ரூபா பொது நிதி முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]

மஹிந்தவின் குருணாகல் – மெதமுலன இல்லங்கள் தீக்கிரையாகின!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான, குருணாகலில் உள்ள வீடொன்று பிரதேசவாசிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், மெதமுலனவில் உள்ள, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரம்பரிய வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மெதமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷ மற்றும் தோன தந்தினா ராஜபக்ஷ ஆகியோரின் நினைவுத் தூபிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி […]

ஊரடங்கு சட்டம் புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் இன்றிரவு 7 மணிமுதல் நாளை (10) காலை 7 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், குறித்த ஊரடங்கு நாளை மறுதினம் வரை […]

தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை

விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு கோரி நேற்றிரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது […]