இந்தியப் படைகளை இலங்கைக்கு…

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டரின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா பூரணமாக ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நேற்றைய தினம் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான செய்திகளும் நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்லவென […]
நாடளாவிய எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை (12) காலை 07 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் பதற்றமான […]
ஊரடங்கு சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. அந்த வகையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் வியாழக்கிழமை 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டள்ளது. முன்னதாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச சட்டமானது நாளை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது 12 ஆம் திகதி காலை வரை நீடிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவித்தல்

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, ஊரடங்கு காலப்பகுதியினுள், விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கான அறிவித்தல் ஒன்றை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ளது. ஊரடங்கு காலப்பகுதியில் விமான நிலையத்துக்கு பயணிப்பவர்கள் தங்களுடைய விமான பயணச் சீட்டுகள் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தமுடியும் என்றும், விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் தமது கடவுச்சீட்டினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக உபயோகிக்க முடியும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் […]
உள்நாட்டு உற்பத்திக்கான வரி விகிதம் கடந்த ஆண்டில் மந்தமான வளர்ச்சி

அரச இறை, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வரி விகிதம் கடந்த ஆண்டில் மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அரச, அரச இறைவரியானது, வருடாந்த அடிப்படையில் 6.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச அரச இறைவரி கடந்த ஆண்டு 8.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச இறைவரி சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக […]
நாடளாவிய மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு!

காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டம் இடம்பெற்ற பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் காவல்துறை உப பரிசோதகர் என தெரிவிக்கப்படுகிறது. நிட்டம்புவ துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகாிப்பு காலி முகத்திடலில் ‘கோட்டா கோ […]
4 மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்!

இவ்வருடத்தில் இதுவரையாக காலப்பகுதியினுள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 121,795 என குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]