தேயிலை ஏற்றுமதி பாரிய அளவில் பாதிப்பு

தற்போதைய பொருளாதார பின்னடைவு காரணமாக தேயிலை ஏற்றுமதி பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக மிகவும் குறைந்த அளவில் தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது. தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தரம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் அந்நிய செலாவணியாக இலங்கைக்கு கிடைத்து வந்தது. முன்னதாக கடந்த வருடம் சில ரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தேயிலை உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகியது. இந்த நிலையில் கடந்த 2021 நொவம்பர் முதல் 2022 […]
ரணில் ஆற்றிய உரையின் முழு வடிவம் (வீடியோ தமிழில் முழு விபரம் இணைப்பு)

”உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது , கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன். அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். […]
ஊரடங்கு நேரத்தில் மாற்றம், 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள காலப்பகுதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. முன்னதாக இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” […]
பொருளாதார நன்மைக்காக ஆதரவளிக்க தயார்

நாட்டின் பொருளாதார நன்மைக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்க தயார் – ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பொருளாதார நன்மைக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்க தயார் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதேவேளை எந்த அமைச்சரவை பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் […]
தங்கத்தின் பெறுமதியும் குறையும் வாய்ப்பு

அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டு வரும் நிலையில் தங்க விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது சரிவில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவை தங்கம் வாங்க காத்திருப்போருக்கு சரியான வாய்ப்பாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதேவேளை, குறுகிய காலத்தில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1780 டொலராகவும், மெக்ஸ் தங்கத்தின் விலை […]
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்

நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் சில தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த சுற்றறிக்கைகளை ரத்து செய்யுமாறு இறக்குமதியாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை கட்டண அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையுவுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீட்க […]
இலங்கை உலக தரப்படுத்தலில் பாரிய வீழ்ச்சி

உலகின் இரண்டாவது அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக, ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீபன் ஹெங்க் வழங்கிய இந்த வார பணவீக்க அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிம்பாப்வே மட்டுமே இலங்கைக்கு மேலே உள்ளது. லெபனான், சூடான், ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளை தாண்டி இலங்கை பணவீக்கம் சாதனை அளவில் உயர்ந்துள்ளது என்பதை பேராசிரியரின் அட்டவணை காட்டுகிறது. இந்த வார பணவீக்க அட்டவணையில், இலங்கை மீண்டும் ஒருமுறை தீவிரமான ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது, பணவீக்கம் 132 […]