எரிவாயு கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்தது!

எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த கப்பலில் சுமார் 3,800 மெட்ரிக் டன் எரிவாயு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் 24 மணிநேரமும் மக்கள் வரிசைகளில் நிற்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதேவேளை, இந்த வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், […]

கோதுமை மா விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமது கோதுமைமா விலையை அதிகரிக்குமாறு அனைத்து முகவர்களுக்கும் ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை செரன்டிப் நிறுவனம் 35 ரூபாவால் அதிகரித்துள்ளது. கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது தொழிற் துறை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் […]

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு திறைசேரியில் நிதி இல்லை

அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் தெரிவித்தார். அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குரிய செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் தேட வேண்டியுள்ளது. இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல. உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், அதனை முன்னதாகவே […]

இலங்கையில் ஒருவர் 10 000 டொலர் மட்டுமே வைத்திருக்கலாம்

இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி ,15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச்செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேற்கண்டவாறு மேலதிக வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் […]

விவசாயிகளுக்கு 10,000 ரூபாவுக்கு ஒரு மூடை இரசாயன உரம்

விவசாயிகளுக்கு ஒரு மூடை இரசாயன உரத்தை 10,000 ரூபாவுக்கு வழங்க பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் டன் உரத்தை இம்மாத இறுதிக்குள் இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022 ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை, தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவசியமான […]

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறைக்கொண்ட பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்தார். அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் 40 ரூபாவினாலும், செரண்டிப் நிறுவனம் 35 ரூபாவினாலும் அதிகரித்துள்ளன. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]

இன்று முதல் நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயு விநியோகம்!

இன்று முதல் நாளாந்தம் 80, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களை நாளாந்தம் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதேநேரம், 3, 800 மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் 2, 800 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, கப்பல் கொழும்புத் […]