இந்திய ரூபாவில் மேற்கொள்ள இலங்கைக்கு வாய்ப்பு!

இலங்கையுடனான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கான தீர்ப்பனவுகளை, இந்திய ரூபாவில் மேற்கொள்ள இந்திய மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதனூடாக, ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் பொறிமுறைக்கு அப்பால், இந்திய ரூபாவில், தீர்ப்பனவுகளை மேற்கொள்ள இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள், இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளின்போது எதிர்நோக்கும் சிக்கல் நிலையைக் கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளதாக இந்திய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]
4 எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்

வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை மீறி கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகித்தமை மற்றும் கையிருப்பை விநியோகிக்காமல் வைத்திருந்தமை காரணமாக நான்கு நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகு தன்மையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு முதல் இடைநிறுத்தியுள்ளது. ஏனைய வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்வதற்காக காவல்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தற்காலிக அனுமதிப்பத்திரமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 […]
இன்று 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்

இன்றைய தினம் நாடுமுழுவதும் 50, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துளளது. நாட்டை வந்தடைந்துள்ள 3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பலில் இருந்து, எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாளைய தினம் 80, 000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் […]
இலங்கைக்கு கடன் வழங்க ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு

இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக ஒத்துழைப்பு வழங்க ஜி-7 நாடுகள் முன்வந்துள்ளன. உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெறுகிறது. அந்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கான உதவிகளை வழங்க ஜி-7 நாடுகள் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடனான வினைத்திறனான பேச்சுவாத்தைக்கு ஒத்துழைப்பு […]
மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வு

அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக ஹட்டனில் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி கிலோ 800 ரூபாய், கேரட் ஒரு கிலோ ரூ.400, மிளகாய் கிலோ 400 ரூபாய், கத்தரி கிலோ 450 ரூபாய், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 300 ரூபாய், ஒரு கிலோ வெண்டைக்காய், பீட்ரூட், கோவா ரூ.300, ஒரு கிலோ பச்சை மிளகாய் சுமார் ரூ.600 விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மரக்கறிகள் அனைத்தும் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவுக்கும் அதற்கு மேலதிகமாகவும் விற்பனை […]
இன்றைய டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் படி, அமெரிக்க டொலர் இன்று மூன்றாவது நாளாகவும் மாற்றமின்றி உள்ளது. அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ. 364.63, பதிவாகியுள்ளது. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்

விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022 ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை, தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவசியமான எரிபொருள் தொகையினை விவசாயிகளுக்கு வழங்க அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எச். ருவான்சந்திர தீர்மானித்துள்ளார். விவசாய நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விவசாய பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தும் இயந்திரம் மற்றும் வாகனங்கள் தொடர்பாக முறையான உரிய திட்டத்தின் படி, எரிபொருள் வழங்குவது தொடர்பில் அனைத்து […]