ஐஸ்லாந்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது

ஐஸ்லாந்து 60 வயதுக்கு மேற்பட்ட ஷாப்பிங் செய்பவர்களுக்கு புதிய தள்ளுபடியை அறிமுகப்படுத்த உள்ளது, ஏனெனில் உயர்ந்து வரும் விலைகள் வீட்டு வரவு செலவுத் திட்டங்களை பாதிக்கின்றன. மேலதிக செய்திகளை அறிய இங்கே பார்க்கவும் Iceland to launch over-60s discount as cost of living soars வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மூலம் தனது பழைய வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்குவதாக சூப்பர்மார்க்கெட் சங்கிலி தெரிவித்துள்ளது. 40 வருடங்களாக […]
இலங்கை இன்றைய நாணயமாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா நிலையானதாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி ரூ. 364.45. ஆக பதிவாகியுள்ளது. மே 13 முதல் அமெரிக்க டொலரின் பெறுமதி 364 – 365 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி […]
யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து வருகின்ற போதிலும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்பொழுது யாழ் மாவட்டத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பெறுவதில் உள்ள சிரம நிலை தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மாதங்களை விட அதிகளவிலான மண்ணெண்ணெய் எம்மால் […]
53 எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற மதிய போசனம் நிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடளுமன்ற உணவகத்தில் உணவு வழங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் மதியப் போசனத்தை நிறுத்துமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் 53 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த கடிதத்தில் பதில் அளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் போராட்டம் செய்யும் இளைஞர்களும் சில அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இராஜினாமா செய்வது பற்றி அவர்கள் […]
ஜப்பானிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் நோக்கில் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதன்படி, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்த நிதியானது ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தினால் குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு உதவி வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 15,000 நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும் 380, 00பாடசாலை மாணவர்களுக்கும், மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு […]
ஜீ-7 நாடுகளின் அறிவிப்புக்கு ரணில் வரவேற்பு

கடன் நிவாரணங்களை பெறுவதற்கு இலங்கைக்கு உதவுவதாக ஜி-7 நாடுகள் வெளியிட்ட அறிவிப்புக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்பு தெரிவித்துள்ளார். இலங்கையுடனான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முக்கியமானதாகும் என்று ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடன் நிவாரணங்களை பெறுவதற்கு இலங்கைக்கு உதவி வழங்க ஜி-7 நாடுகள் முன்வந்துள்ளன. உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெறுகிறது. அந்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை […]