சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் கையளிப்பு!

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கு அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட நினைவூட்டல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது.2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம்கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் சம்பந்தனுக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் […]
சுற்றுலா சென்றால் வாடகைக்கு மனைவி.

தாய்லாந்து ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தாய்லாந்தில் வாடகை மனைவிகளின் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், இதைப் பற்றிய ஒரு புத்தகம் வெளியாகி விவாதத்திற்குள்ளானது. இந்த சர்ச்சைக்குரிய நடைமுறை தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ளது. இங்குள்ள மக்கள் இதை “wife for hire” என்று அழைக்கின்றனர். இது ஒரு தற்காலிக திருமண ஏற்பாடாகும். அங்கு பெரும்பாலும் ஏழை கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் துணையாக மாறுகிறார்கள். இந்த நடைமுறை முக்கியமாக தாய்லாந்தின் பட்டாயாவின் red-light […]
இலங்கை பாராளுமன்றத்தில் மறைமுகமாக தமிழை ஒழிக்க கடும் நடவடிக்கை!

மறைமுகமாக இலங்கை பாராளுமன்றத்துக்குள் தமிழை ஒழிக்க என் பி பி கட்சியினர் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன! இதற்க்கு உடந்தையாக யாழ் எம்பி வைத்தியர் அர்ச்சுனா மறைமுக ஆதரவை வழங்கி வருவதாகவும் தெரிய வருகிறது தமிழர்களுக்குள் தமிழர்களை முட்டிவிடும் ராஜதந்திரத்தில் என் பி பி ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் பாராளுமன்றத்தில் யாரும் தமிழில் உரை நிகழ்த்தக் கூடாது. இதற்காக என் பி பி கட்சியினர் மறைமுகமாக பாரிய நிதிகளை வைத்தியர் அர்ச்சுனாவுக்கு […]
பரோட்டா சாப்பிட்ட மாணவி மரணம்!

கோவை மாவட்டம் துடியலூர் தொப்பம்பட்டி பிரிவு போர்ட்லண்ட்ஸ் குடியிருப்பில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா வயது 22. தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றிரவு புரோட்டா சாப்பிட்டு தூங்க சென்றார். காலை கீர்த்தனா மயங்கி கிடந்தார். பதறிய பெற்றோர் மகளை கோவை அரசு ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்தம் இல்லாமல் ஒரு சம்பவம்…

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் இறுதியாக நேற்றிரவு (28) வெளியானது. “எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என அட்டகாசமான வரிகளுடன் இந்த டீசர் ஹொலிவூட் பட தரத்துக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமார் மற்றும் அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த 2 ஆண்டுகளாக அநேகமான தடைகளை தாண்டி உருவாகி வருகிறது. இந்த […]
மோகன்லாலும் மம்முட்டியும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்!

மாலையாள திரைப்படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பானது நவம்பர் 19 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமானது. இரண்டு தசாப்தங்களின் பின்னர் மோகன்லாலும் மம்முட்டியும் ஒரு படத்தில் இணைந்துள்ளதால் மாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று தருணம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் இவர்கள் மட்டுமின்றி ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படம் மலையாள திரையுலகின் மிகப்பெரிய படங்களில் […]
ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (29) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 286.31 ரூபாவாகவும், 295.04 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது நேற்றைய தினம் முறையே 286.57 ரூபாவாகவும், 295.58 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு நாணயங்களுக்கு […]