வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது..

2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் 310,948 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண் மற்றும் 122,358 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். […]

மாவையின் பதவி விலகல் – நாளைய தினம் வவுனியாவில் கூடும் மத்திய செயற்குழு.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சோ.சேனாதிராஜா குறித்த தீர்மானம் தொடர்பில் அவரிடமிருந்து இறுதிப் பதிலொன்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பு நீடிப்பதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மாவை சோ.சேனாதிராஜா எழுத்துமூலமாக கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் அனுப்பி வைத்திருந்தார். இருப்பினும் குறித்த […]

வெளியாகியது Bar Permit லிஸ்ட்! சிக்கினார் சுமந்திரன்!

Bar Permit அனுமதியையும் பெற்றுக்கொடுத்து பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறப்புவிழாவினை செய்த சுமந்திரன்! ஆதாரம் இதோ… ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லை. கோத்தபாய ராஜபக்க்ஷ ஆட்சிக்காலத்தில் 2021 ஆண்டு கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாய், கட்டுடையில் Momondo Restaurant and Hotal அமைப்பதற்கு உரிய சிபார்சினை சுமந்திரன் வழங்கி bar இயங்க முயற்சி எடுத்த வேளை அந்த ஊர் மக்களின், கடும் எதிர்ப்பு காரணமாக சண்பிலிப்பாய் பிரதேச செயலாளர் அனுமதி வழங்க மறுத்த நிலையில், அப்போது பாராளுமன்ற […]

அதிர்ச்சி வீடியோ! ரௌடியை போல நடந்த அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடவடிக்கைகள், அண்மைய காலமாக பல சர்ச்சைகளையும் பொதுமக்கள் தரப்பில் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றன. இருப்பினும், இவ்வாறான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதற்கான காரணங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், தேசிய தலைவரின் பெயரை வைத்து எல்லை மீறும் வகையில் அவர் செயற்படுவதாகவும் ஒரு தரப்பில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. நாட்டின் பொதுமக்களாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலும் அனைவருக்கும் சட்ட ஒழுங்குகளும் கட்டுபாடுகளும் இருக்கின்றன. அவற்றை முழுமையாக முதலில் எல்லோரும் கற்றுகொள்ள வேண்டியது அனைவரினதும் அவசியமாகும். மேலும், […]

கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி மீளப் பெற்ற அதானி

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திற்கு, அந்த குழுமத்தின் கோரிக்கைக்கு அமைய 553 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்தநிலையில், குறித்த கோரிக்கையை அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதற்கமைய, கொழும்பு மேற்கு […]

இணையத்தில் இலங்கை சிறார்களின் ஆபாச காணொளி..

இணையத்தில் இலங்கை சிறார்களின் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களைச் சிலர் வெளியிடுவதாக நெக்மெக் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணிக்கத்திற்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை வழங்கினார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘நெக்மெக்’ என்ற இணைய நிறுவனம் உலகின் எட்டு நாடுகளை […]

எரியுண்ட நிலையில் யாழில் பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.