இணையத்தில் இலங்கை சிறார்களின் ஆபாச காணொளி..

இணையத்தில் இலங்கை சிறார்களின் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களைச் சிலர் வெளியிடுவதாக நெக்மெக் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணிக்கத்திற்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை வழங்கினார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘நெக்மெக்’ என்ற இணைய நிறுவனம் உலகின் எட்டு நாடுகளை […]
எரியுண்ட நிலையில் யாழில் பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அனுமதி!

தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து அமல்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாளை முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை அண்மித்து டிசம்பர் 11 ஆம் திகதியளவில் அடைய வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தின் கீழ், டிசம்பர் 10 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை நிலையும் மேற்குறிப்பிட்ட நிலையுடன் நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் […]
அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கை…

அரிசியின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மூடைகளை வெளியே கொண்டு வரும் விதமாகவும், புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு அரிசி ஆலைகளை சோதனை செய்யும் நடவடிக்கையினை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. நாட்டில் நேற்று முதல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக அரிசி ஆலைகளில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை […]
வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) வீழ்ச்சி கண்டுள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 208,000 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 191,500 ரூபாவாகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை (05) 24 கரட் தங்கம் ஒரு பவுணானது 210,000 ரூபாவாகவும் 22 கரட் […]
யாழ் பகுதியில் இளம் தாய் தீடிரென உயிரிழப்பு.

ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையி்ல் நேற்றைய தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா வயது 32 என்ற ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் . சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு […]