தனிமையில் இருக்கும் பயனர்களுக்காக உருவான அதிரடி செயலி

தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘Are You Dead’ என்ற செயலி சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை இதில் உள்ள விசேட பொத்தானை அழுத்தி, ஒவ்வொரு 02 நாட்களுக்கும் ஒருமுறை உறுதி செய்யலாம். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், பயனர்கள் ஏற்கெனவே பதிந்து வைத்துள்ள நெருக்கமான நபர்களுக்கு தானாகவே முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்படும். வெகுதொலைவில் தனியாக வசிக்கும் இளைஞர்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் […]

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று காரிய அனுகூலம் கிடைக்கும். […]

மனைவியை ஏன் கொன்றேன்? கணவனின் பரபரப்பு வாக்குமூலம்!

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் தற்போது தனது மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவை பலனளிக்காமல் சுப்ரியா […]

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் முதலிடம்! இலங்கை பாஸ்போர்ட்?

விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index) – 2026 பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலின்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணம் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர். உலகளாவிய பயண சுதந்திரத்தில் இது மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. 2-வது இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஹென்லி பாஸ்போர்ட் […]

மகாவலி கங்கை பெருக்கெடுப்பு: திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம்

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் நீரேந்து பகுதிகளில் இருந்து வரும் மேலதிக நீர்வரத்து காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, திருகோணமலை மாவட்டத்தின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் மீண்டும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக, வெண்டராசன் குளம் மற்றும் கந்தளாய் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், வெளியேறும் மேலதிக நீர் மகாவலி கங்கையில் கலந்து ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் அபாய நிலையை உருவாக்கியுள்ளது.”“கிண்ணியா பிரதேசத்தில் மட்டும் கடந்த நவம்பர் மாத […]

யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்.

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் பக்‌ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், யாசகம் பெற்ற அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு […]

பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஷானிகா லக்ஷானியை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இன்று வெள்ளிக்கிழமை (31) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 54(1) இன் கீழ் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க போதுமான ஆதாரங்களை அரச தரப்பு சமர்ப்பிக்காததால், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் […]