சாணக்கியன் உறவினரின் மதுபான சாலை மீது வாழ்வெட்டு

நேற்றைய தினம் (22.12.2024) மூதூர் இருதயபுர மதுபானசாலையில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் மூதூரைச் சேர்ந்த மூன்று நபர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தோப்பூரை சேர்ந்த பல சண்டியர்கள் ஒன்றிணைந்து குறித்த மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகிய காட்சி விளக்குகிறது. இந்த மதுபான சாலை சாணக்கியனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மதுபான சாலை என்பது குறிப்பிடத்தக்கது
கீர்த்தி கல்யாணத்தில் பட்டு வேட்டியுடன் விஜய்

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். 15 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக, கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், “எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் […]
ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கம் செல்வார்களா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது சமூக வலைத் தளப்பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கொன்றில் வெளியானது.இதன்போது அங்கு அல்லு அர்ஜுன் வருவதை அறிந்த மக்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கு […]
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்!

தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராக உயர்ந்த கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக தனது 65 ஆவது வயதில் காலமானார். பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த கோதண்டராமன் துணை வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மூலம் பிரபலமடைந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் […]
67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் மொத்தம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் இறக்குமதியாளர்களினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் கையிருப்பில் இருந்து இறக்குமதி வரியாக இலங்கை சுங்கத்துறைக்கு 430 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று (20) வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது, […]
டிக்டோக்கிற்கு தடை விதித்த ஐரோப்பிய நாடு ஒன்று!

சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்கள் தாக்கம் குறித்த அச்சத்துக்கு மத்தியில் அல்பேனிய அரசாங்கம் பிரபல வீடியோ செயலியான டிக்டோக்கிற்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. கடந்த நவம்பரில் சமூக ஊடக முரண்பாட்டினால் வயது பாடசாலை மாணவன் ஒருவனை அவரது சக வகுப்புத் தோழி கத்தியால் குறித்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய எதிர்ப்பு மற்றும் அரசாங்க அமைதியின்மைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உத்தேச தடை உத்தரவானது 2025 ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என்று […]
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் மரணம்.

மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார் இறப்பிற்கான காரணங்கள் இதுவரையில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவியின் இழப்பு அப் பகுதி […]