டீசல் கப்பல் இலங்கை வந்தது!

40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று (16) இலங்கையை வந்தடைந்துள்ளது. அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், டீசல் தாங்கிய 2ஆம் கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையும் என்றும் பெற்றோல் தாங்கிய கப்பல் அடுத்த வாரம் (18-19 ஆம் திகதி) நாட்டை வந்தடையுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். லங்கா ஐஓசி நிறுவனம் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் மிக […]
மீண்டும் வருவேன்bதொடர்ந்து சேவையாற்றுவேன்

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தொடர்ந்தும் தாய் நாட்டுக்காக சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே இதனை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இன்று பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார். அந்தக் கடிதத்தில், நான் ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கொவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்தது. அந்த நேரத்தில் […]
ரஞ்சன் ராமநாயக்க விடுதலை

சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதில் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, பதில் ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரையை விடுத்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்து சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரிடம் ஒப்படைக்குமாறு […]
சிம்மாசனம் யாருக்கு ?

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவு பாராளுமன்றத்தின் ஊடாக அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. இதற்காக 4 பிரதான வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளமையை நேரடியாக அறிவித்துள்ள நிலையில் , மேலும் சிலரும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கமைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க , எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் […]
அதிமேதகு ஜனாதிபதி கொடி நீக்கப்படும்: 19 உடன் அமுலாகும்

ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு என்ற அடைமொழி பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், விடுத்த விசேட அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உடனடியாக நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதிக்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த சில நாட்களில் செய்து தரப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். […]
ஊடக அறிக்கை

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 38.1 (ஆ) பிரிவுக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜக்பக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இராஜினாமாக் கடிதம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, 2022 ஜூலை 14 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய தற்பொழுது முதல் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் அரசியலமைப்பு செயன்முறை நடைமுறைக்கு வரும். அந்த செயன்முறை நிறைவுறும் வரை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளை பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும் அரசியலமைப்பின் பிரகாரம் […]
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(15.07.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com