ஊடக அறிக்கை

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 38.1 (ஆ) பிரிவுக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜக்பக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இராஜினாமாக் கடிதம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, 2022 ஜூலை 14 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய தற்பொழுது முதல் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் அரசியலமைப்பு செயன்முறை நடைமுறைக்கு வரும். அந்த செயன்முறை நிறைவுறும் வரை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளை பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும் அரசியலமைப்பின் பிரகாரம் […]

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(15.07.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

மெய்நிகர் நாணய பயன்பாடு தொடர்பில் மத்திய வங்கி அறிவித்தல்!

இலங்கையில் மெய்நிகர் நாணயங்களின் பயன்பாடு தொடர்பில், மத்திய வங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவித்தலை விடுத்துள்ளது. மெய்நிகர் நாணயங்கள், தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் பெருமளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத எண்மான ரீதியான பெறுமதியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இலத்திரனியல் ரீதியாக வர்த்தகப்படுத்தப்படக் கூடியவையாகும். க்றிப்டோ கரன்ஸிஸ் (Cryptocurrencies) என்ற மறைகுறிநாணயங்கள் உட்பட மெய்நிகர் நாணயங்களை ஈடுபடுத்துகின்ற திட்டங்களை தொழிற்படுத்துவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது கம்பனிக்கோ ஏதேனும் உரிமத்தை அல்லது அதிகாரத்தை இலங்கை மத்திய வங்கி வழங்கவில்லை. அத்துடன் ஏதேனும் ஆரம்ப குற்றி வழங்கல், வார்த்தல் […]

புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு இடம்பெறும்?

1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விளக்கமொன்றை அளித்துள்ளது. அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தின் (1) உப பிரிவுக்கமைய, ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 ஆவது சரத்துக்கமைய, வெற்றிடமாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிப்பதற்கு நாடாளுமன்றத்தினால், அதிலுள்ள உறுப்பினர்களில் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி […]

பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில்!

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இலங்கையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக […]

கோத்த பாயாவின் பதவி விலகல்! கொண்டாட்டத்தில் மக்கள்

கோத்த பாயாவின் பதவி விலகல் வெற்றிக் கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும்: இராணுவம்

இராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடும். உயிராபத்துகளை கட்டுப்படுத்த வேண்டியது இராணுவத்தின் பொறுப்பு எனவும் பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் இணைந்து கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் இறைமையையும் மக்களின் நடமாடும் சுதந்திரத்தையும் […]