பொது அவசர நிலை பிரகடனம்!

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் […]

15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறக் கோரிக்கை

கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக கோட்டபாய ராஜபக்ச மாலைதீவுக்கு தப்பிச் சென்றதுடன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கு தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்று சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம், சிங்கப்பூர் […]

உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் விழ்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வலுவான கொள்கைத் திட்டம் தேவை என்று நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டர்லினா ஜார்ஜீவா Kristalina Georgieva சுட்டிக்காட்டியுள்ளார். ஆகக்கூடிய கடன் மற்றும் வாழ்தாரக் கொள்கையைக் கொண்டுள்ள நாடுகளின் பொருளாதாரத்திற்கு இலங்கை எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்ட முடியுமென்றும் முகாமையாளர் […]

இலங்கையில் உணவு நெருக்கடி அதிகரிக்கக்கூடும்

விதை நெல் உற்பத்திக்கு தேவையான வசதிகளுடன் எரிபொருள் மற்றும் உரம் ஆகியன விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லையெனில் அரசியல் நெருக்கடியை காட்டிலும், உணவு நெருக்கடி அதிகரிக்கக்கூடும் என முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம் கே. பி குணரட்ன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக, அடுத்த போகத்திற்கு தேவையான விதை நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயலாமல் போயுள்ளது. எனவே, இந்தவிடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு தேவையான […]

எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு இதுவரை 100,000க்கும் அதிகமானோர் பதிவு

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக வெற்றிகரமாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இன்று மாலைக்குள் 100,000 ஐ தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முறை நேற்று அறிமுகம் செய்யப்பட்டதுடன், பல வாகனங்களை இயக்கும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வர்த்தகப் பதிவு இலக்கத்தைப் பயன்படுத்தி தமது சகல வாகனங்களையும் பதிவு செய்யும் வகையில் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தகவல்களை சரிபார்த்த பிறகு ஒவ்வொரு வாகனத்திற்கும் […]

வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் அட்டை மற்றும் வாகன இலக்க விதிமுறை கட்டாயமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வணிகங்கள் அல்லது பல வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள், தங்களின் அனைத்து வாகனங்களையும், நிறுவன பதிவு இலக்கத்தின்கீழ், பதிவு செய்வதற்காக தேசிய எரிபொருள் அட்டையானது, சில தினங்களில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். […]

எரிபொருள் விலைகள் குறைப்பு!

எரிபொருள் விலையினை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டென் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் இந்த எரிபொருள் விலைத்திருத்தம் அமுலாகவுள்ளதாக […]