போராட்டக்களத்தின் கோரிக்கைகள் பாராளுமன்றில் பிரதிபலிக்கவில்லை

பாராளுமன்றத்துக்குள் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவானது, களத்தில் உள்ள நிலைமைக்கு முரணானது என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். போராட்டக்களத்தில் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் இன்று பாராளுமன்றில் பிரதிபலிக்கவில்லை. பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவின்பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]

காலி முகத்திடல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், குறித்த சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய […]

தம்மிக்க பெரேரா எம்.பி.பதவியை இராஜிநாமா செய்வார்

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (21) பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நுழைந்தார். பின்னர், ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், ஜூலை 10ஆம் திகதி இராஜினாமா செய்தார். 16 நாட்கள் […]

நாம் இனிமேல் ஒன்றாக பயணிக்க வேண்டும்: ஜனாதிபதி ரணில்

இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, பாராளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். நாடு இன்றுள்ள நிலைமை தொடர்பாக நாம் அனைவரும் நன்றாக அறிவோம். எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன். […]

134 வாக்கினை பெற்று ஜனாதிபதியாகினார் ரணில்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க 134 டலஸ் அழகப்பெரும 82 அநுர குமார திசாநாயக்க 3 செல்லுபடியற்ற வாக்குகள் – 4 வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் – 2 Total 223 நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். இந்தநிலையில் […]

வாக்குப்பதிவு முடிந்தது; வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், வாக்குகள் எண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மூன்று வேட்பாளர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, டிலான் பெரேரா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையை அவதானிக்கவுள்ளனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சேலைன் போத்தலுடன் வாக்களிக்க வந்த எம்.பி

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்துக்கு உடல்நலக்குறைவால் சேலைன் போத்தலுடன் வாக்களிக்க வந்ததுடன், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com