தினேஷ் குணவர்தன பிரதமராக பதவியேற்றார்

இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொது நிர்வாக அமைச்சருமான தினேஷ் குணவர்தன சர்வதேச வணிக துறையில் பட்டம் பெற்றவராவார். 1983 ஆம் ஆண்டு மஹரகம தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த தினேஷ் குணவர்தன தற்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாடசாலை கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com […]
சூயஸ் கால்வாய் வருவாயில் பாரிய மாற்றம்!

எகிப்தின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக சூயஸ் கால்வாய் திகழ்ந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் 2021 ஜூலை மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரை, எகிப்து அரசாங்கத்திற்கு கடந்த 135 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 7 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வருமானத்தை விட இது 20.7 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சூயஸ் கால்வாயில் ‘எவர்கிரீன்’ என்ற சரக்கு கப்பல் அகப்பட்டுக்கொண்டதால் சுமார் ஒரு வாரத்திற்கு கப்பல் […]
கோட்டாபயவுக்கு குறுகிய கால விசா !

ஜுலை 14 ஆம் திகதி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஸ விமானம் மூலம் நாட்டிற்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் இந்த குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக இந்தியாவின் NDTV செய்தி வௌியிட்டுள்ளது பொதுவாக இலங்கையர்களுக்கு 30 நாட்களுக்கு விசாவை நீடிக்க முடியுமெனவும் அதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க […]
வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் தண்டனை!

எரிபொருளுக்காக வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி வாகனங்களை பயன்படுத்திய நிலையில் சிக்கினால், 20 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்ய முடியும் எனவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். 1984 ஆம் ஆண்டு இலக்கம் 40 மோட்டார் […]
நாளை அமைச்சரவை புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்கும்

சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் வரை தற்காலிகமாக புதிய அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது. ஏற்கனவே காணப்பட்ட அமைச்சுப்பதவிகளை அமைச்சர்களே நாளை புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர். அதற்கமைய கொழும்பு – 7 , பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இம்முறை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பினை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]
பணவீக்கத்தை சமாளிக்க ஐரோப்பிய மத்திய வங்கி விகிதங்களை உயர்த்தியுள்ளது

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) 11 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது, அது உயர்ந்து வரும் யூரோப்பகுதி பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. ECB அதன் முக்கிய வட்டி விகிதத்தை 0.5 சதவீத புள்ளிகளால் 0.0% ஆக உயர்த்தியது மற்றும் இந்த ஆண்டு மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளாக பலவீனமான வளர்ச்சிக்குப் பிறகு பிராந்தியத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் விகிதம் 2014 முதல் எதிர்மறையாக உள்ளது. ஆனால் ஜூன் முதல் 12 மாதங்களில் […]
இம்மாத முடிவுக்குள் எரிவாயு தட்டுப்பாடுக்கு தீர்வு

இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். மேலும் ஜூலை மாத இறுதிக்குள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு எரிவாயு சிலிண்டர் தாங்கிய சுமார் 6 தொடக்கம் 7 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலர் கைவசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com […]