வடக்கு – கிழக்கிற்கான சுயாட்சி திட்டத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியை ஏற்படுத்தக்கூடிய திட்டம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக எவ்வாறு பொருளாதார நலனை பெறுவது என்பது குறித்தும் அவர் அவதானம் செலுத்துவார் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க […]
அனுமதிப்பத்திர முறைமை நாடுமுழுவதும் அமுல்!

இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த தினங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்த தினங்களில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்தநிலையில், இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் […]
QR குறியீட்டு முறைமை அமுலாகும் – இறுதி இலக்கம் ஆகஸ்ட் 1 வரை மட்டுமே

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR குறியீட்டு முறைமை நாளை (26) முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை தொடரும் என்றும் அதன் பிறகு முழுமையாக QR குறியீட்டு முறைமை மாத்திரம் அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக QR முறைமையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என தகவல் […]
கொடிச்சீலை காளாஞ்சி கையளிப்பு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களுக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24) இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(24) காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து வள்ளியம்மை திருக்கல்யாண படிப்பும் பந்தல்கால் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி வழங்குவதற்காக ஆலய பிரதம சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் ஆலயத்திலிருந்து புறப்பட்டனர். காளாஞ்சி, மாட்டுவண்டியின் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் […]
கிளிநொச்சி விவசாயிகளுக்கான யூரியா உரம் விநியோகிக்க நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான ஒரு தொகுதி யூரியா உரம் உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கம நல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யூரியா உரம் இத்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 200 மெற்றிக் தொன் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட அரச அதிபரின் முயற்சியின் பயனாக 222 .65 மெற்றிக் தொன் யூரியா கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து கிளிநொச்சி கமநல […]
வாகனங்கள் QR குறியீட்டின் கீழ் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றன

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், QR குறியீட்டின் கீழ் 20 இடங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 4708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார். இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் 25 இடங்களில் எரிபொருள் சோதனைகளை மேற்கொள்ளவிருந்த போதிலும், ஓர்டர்கள் வழங்கப்படாமை, தாமதம் மற்றும் விநியோகக் குறைபாடுகள் காரணமாக 05 இடங்களைப் பரிசோதிக்க […]
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் பிரச்சினை

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக் கடைகளை நோக்கி படையெடுக்கத் ஆரம்பித்துள்ளனர். உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகரித்துவரும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் மக்கள் மனதில் நிலவி வருகிறது. அரசுகள் ஒரு பக்கம் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், மக்கள் தாங்களும் மாற்று ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள். அவ்வகையில், சுவிஸ் மக்கள் விறகுக்கடைகளை நோக்கிப் […]