பகிர வேண்டாம். வேறு ஒருவர் பெட்ரோலை பெற்று செல்ல முடியும்.

உங்கள் QR கோர்ட்டை பொது வெளியில் பகிர வேண்டாம். அதன் மூலம் வேறு ஒருவர் பெட்ரோலை பெற்று செல்ல முடியும். QR கோர்ட்டின் மேல் வாகன இலக்கம் இருக்கும். ஆனாலும் பெட்ரோல் செட்டுகளில் வாகன நம்பர்களை பரிசோதிப்பது குறைவு. அவ்வாறு பரிசோதித்து இது உங்கள் நம்பர் இல்லை என கூறினால் உடனேயே அவரும் “இது சகோதரின் QR மாற்றி தந்துட்டேன் என கூறி தன்னுடையதை கொடுத்து தப்பித்துக்கொள்ள முடியும். QR கோர்ட்டை கீ டெக் ஆக அடிப்பது […]

யாழ் பலாலியில் இருந்து விமான சேவை

இந்தியா, இலங்கை வழங்கியுள்ள கடன் வசதியின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதை துரிதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை அரசாங்கம், அடுத்த மாத இறுதிக்குள் யாழ் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராகி வருகிறது. இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகளை ஊக்குவிக்கும் செயலுக்கு பதிலாக அரசியல் அழுத்தங்களின் […]

கடனை திருப்பித்தராது கடத்தல் நாடகமாடிய சிப்பாய்

இனந்தெரியாத குழுவினரால் வான்படை சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் இலங்கை விமானப்படை தெளிவுபடுத்தியுள்ளது. மட்டக்களப்பு வான்படை தளத்தில் கடமையாற்றும் கோப்ரல் ஒருவர் நேற்று (28) காலை வாழைச்சேனை, ரிதிதென்ன பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டு காணப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் வாழைச்சேனை காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில், வான்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த இடத்தில் தமிழில் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காணப்பட்டதாகவும், “முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் […]

4.4 மில். வாகனங்கள் பதிவு – 801 நிரப்பு நிலையங்களில் QR முறைமை

நாடுமுழுவதும் உள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் அட்டை முறைமைக்காக, இதுவரையில் 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 692 நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் 109 நிரப்பு நிலையங்களிலும், இவ்வாறு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் […]

இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை – உலக வங்கி

இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்க கடந்த காலங்களில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை, இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்டுள்ளன. […]

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 368 ரூபா 49 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 449 ரூபா 89 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 14 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபா 56 சதம் சுவிஸ் பிராங் […]

இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு விஜயம் செய்த கமல்!

தமிழக நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனின் அழைப்பின் பேரில் கடந்த 24ஆம் திகதியன்று கமல்ஹாசன்,சென்னையின் இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்துக்கு சென்றிருந்தார். இதன்போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமா துறை குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான கமலஹாசனும் திரையுலகக் குழுவினரும் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்று இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன் கோரிக்கை ஒன்றை […]