யாழில் மிதந்து வந்த வீடு! – ஏசியாவில் இறந்து போனவர்களுக்கு சடங்கு செய்து கடலில் விடுவது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடல் பகுதியில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால், கடல் சீற்றங்கள், புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது. மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இவ்வாறான பொருட்கள் கடலில் மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை பிரதிபலிக்கும் பல […]

டின் மீன்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் 15 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே தரச்சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுள்ளன. அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படும் 48 வகையான டின்மீன்களுக்கு இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஏனைய 13 வர்த்தக நாமங்களைக் கொண்ட […]

தமிழினத்தை பாடையேற்றுவதற்கு முற்படுகிறார அன்னிய கைக்கூலி சாணக்கியன்?

பாரளமண்றக்குழுத்தலைவர் சி.சிறீதரன் அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்கூறும் பணியை சாணக்கியனுக்கு வழங்கியது யார் ???இன்றைய நாட்களில் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு செய்கின்ற துரோகத்தின் உச்சகட்டத்தை நாம் கண்டு வருகிறோம். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சாணக்கியன் தனது இனத்துரோக அரசியலை அரங்கேற்றுவதற்கு தொடங்கியுள்ளார்தேர்தல் காலத்தில் வெள்ளாட்டு வேடமிட்ட சாணக்கியன் இப்போது தனது கறுப்பாட்டு தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். இனத்தின் வாழ்வு எக்கதியானாலும் பறவாயில்லை நீதி, தர்மம் இவை எக்கதியானாலும் கவலையில்லை என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்துகிறார் சாணக்கியன். […]

கனகபுரம் துயிலுமில்லத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வி, அதிக போதையில் தடுமாறிய இருவர்!

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், 2016ம் ஆண்டிலிருந்து மாவீரர் நாளை சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடத்தப்பட்டு வருகிறது. எனினும், தற்போதுள்ள மாவீரர் பணிக்குழுவை விடுத்து புதிய பணிக்குழுவை மாற்றும் நோக்குடன், EPDP உறுப்பினர்கள் சந்திரகுமாருடன் இணைந்த ஒரு குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக, EPDP சந்திரகுமாரின் சகோதரர் தீபன், இன்றைய தினம் (11) காலை, புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் என்று சமூக வலைதளங்கள் மூலம் அறிவிப்பு விடுத்திருந்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக, மக்களும் […]

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் அக் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் , தேர்தலுக்கு முன்பு போலியான வாக்குறுதிகளை மக்களைக் கொடுத்து தேர்தலின் பின் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தற்போது தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம். அதற்கு நீட் தேர்வு விவகாரம் ஒரு சான்று. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் […]

பியரின் விலையும் உயர்வு, அதிர்ச்சியில் இலங்கை குடிகாரர்கள்!

மது வரி அதிகரிப்புக்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பியரின் விலை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மதுவரி 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான வரி வெவ்வேறு கட்டங்களின் கீழ் திருத்தப்பட்டுள்ளது. சராசரியாக மதுபான போத்தல் ஒன்றின் விலை 6 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன்! 

சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக சென்னை புறப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை எப்படியாவது தடுத்து நிறுத்த கடுமையாக முயற்சி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இடம்பெறவுள்ள அயலக தமிழர் தின விழாவின் சிறப்பு விருந்தினராக சிவஞானம் சிறீதரன கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில், குற்றபுலனாய்வு மூலம் சிறீதரன் மீது குற்றவியல் வழக்கு குற்றச்சாட்டு இருக்கிறது என போலி முறைப்பாடு ஒன்றை செய்து. குடிவரவு குடியகல்வு […]