7 நாட்களில் 4.3 மில்லியன் எரிபொருள் விநியோகம்:

கடந்த வாரத்தில் 5.5 மில்லியன் வாகனங்கள் QR முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 7 நாட்களில் 1,246 எரிபொருள் நிலையங்கள் ஊடாக 4.3 மில்லியன் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எரிபொருள் 107 டிப்போக்கள் ஊடாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் […]

நாடளாவிய ரீதியில் மேலும் 50 LIOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எரிசக்தி அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

IMF இடம் கடன் பெற வேண்டும் என கூறுபவர்கள் முட்டாள்கள்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற வேண்டும் என எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப் பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தெளிவாகத் தெரிகின்றது. தாய்லாந்து, தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சர்வதேச நாணய […]

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

வெள்ளிக்கிழமையுடன் (05) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368. 51ஆக இருந்த டொலரின் விற்பனை விலை இன்று ரூ. 368. 46 ஆகக் குறைந்துள்ளது. எனினும், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா ஏற்ற இறக்கமாக உள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி […]

முச்சக்கரவண்டி மற்றும் பேருந்துகளுக்கு தனி QR குறியீடு

பொதுப் போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளின் அளவைக் கண்டறிந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ மற்றும் எரிபொருள் நிலையங்களில் இருந்து தனி QR குறியீட்டின் மூலம் எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ மற்றும் மகும்புரஹா பஸ்டியன் மாவத்தையில் (makarpura bastian mawatha ) அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு […]

இலங்கையில் கிளைபோசெட்டின் இறக்குமதி தடை நீக்கம்!

களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான வர்த்தமானியின் கையெழுத்திட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் ரப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை […]

எரிபொருள் விநியோகத்துக்கான QR பதிவு மீண்டும் ஆரம்பம்!

தேசிய எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் அந்த சேவை முடக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் புதிய பதிவுகளுக்காக இந்த அமைப்பு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 […]