சீனா கப்பல் ஏற்படுத்தியுள்ள கலகம்

சீனாவின் நவீன கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் நிகழ்வுகள், உள்நாட்டிலும், பிராந்திய, பூகோள ரீதியிலும் கலகத்தை ஏற்படுத்துவதாக மாறிவிட்டன. இதற்கு அடிப்படையில் காரணமாக இருப்பது, இந்தியா தனது தேசத்தின் தேசிய பாதுகாப்பு மீது கொண்டிருக்கும் அதீதமான கரிசனைகளும், அமெரிக்கா தலைமையிலான பங்காளிகளின் மூலோபாயங்களும் தான். இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் கட்டுரையாளருடன் உரையாடிய போது அதனை மிகத்தெளிவாக குறிப்பிட்டார். […]
கோழி இறைச்சி சந்தையில் கிடைக்காமல் போகலாம்

கால்நடை துறையை அத்தியாவசிய சேவையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் தமது நாளாந்த புரதத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை விலங்குப் புரதத்தில் இருந்து பெற வேண்டும் என கலாநிதி உஷான் பல்லேகம தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கோழி, முட்டை மற்றும் பால் தொடர்பான உள்ளூர் உற்பத்திகள் சந்தையில் கிடைக்காது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்தையும் […]
வேலைவாய்ப்பிற்காக ஒவ்வொரு மணித்தியாலமும் 32 பேர் இலங்கையை விட்டு வெளியேறுகிறார்கள்!

இலங்கைப் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்து மக்கள் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்திருந்தது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு மணி நேரமும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிய வந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 181 நாட்களில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மத்திய வங்கியின் தரவுகள் இதனை குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோத படகுப்பயணங்கள் மூலம் தமிழகத்திற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் செல்பவர்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. […]
ரணிலும் சஜித்தும் இணையும் யோசனை!

ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்பில் இருந்தே இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பிலும் இது தற்போது வாதவிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை […]
இலங்கைக்கான கடனை நிறுத்திய சீனா!

இலங்கைக்கான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான கடனுதவியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் நிறுத்தப்பட்டமையை அடுத்து கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள். அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அத்துடன் இந்த கடன் நிறுத்தல் காரணமாக சுமார் 2000 இலங்கையர்களி;ன் தொழில்களும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன. இலங்கையின் […]
மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும்!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விளைச்சல்கள் சேதமடைந்துள்ளமையினால் எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தெரிவித்துள்ளது. மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 முதல் 70 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்று அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் கரட் மொத்த விற்பனையின் கீழ் 260 ரூபா முதல் 290 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவா […]
சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நாளைய தினம் குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. லிற்றோ எரிவாயு நிறுவன தலைவரை கோடிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 200 ரூபா அளவில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நாளைய தினம், அமைச்சரவையில் இந்த விடயம் முன்மொழியப்பட்டு, விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்ற அடிப்படையில் தேனீர் மற்றும் உணவுப்பொதிகளின் விலையில் குறைப்பு மேற்கொள்ளப்படும் […]