கோட்டாபய சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா மேலும் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசா காலாவதியானதையடுத்து ஆகஸ்ட் 11ஆம் திகதி நாடு திரும்புவதாக இருந்தது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து அவர், இம்மாதம் இறுதி வாரம் வரை சிங்கப்பூரில் தங்கியிருப்பார் எனத் தெரிய வருகிறது. போராட்டக்காரர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட ஜனாதிபதி ஜூலை 14ஆம் திகதி […]

பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏன் நட்டத்தை சந்திக்கிறது? காரணம் சொல்லும் காஞ்சன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏன் நட்டத்தை சந்திக்கிறது என்பதற்கான 8 காரணங்களை தெரிவித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார். பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்வதும் ஒரு காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து அறவிடப்படும் தொகை 300 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும், இலங்கை மின்சார சபையில் இருந்து அறவிடப்படும் தொகை 60 பில்லியன் […]

வௌிநாட்டு நாணய கையிருப்பு 1,708 மில்லியன் டொலர்

ஜூலை மாத இறுதியில் இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் 1,854 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள், ஜூலை 1,815 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. மேலும், வௌிநாட்டு நாணய இருப்புகள் 1,708 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை […]

பால் உற்பத்திக் குறைவால் மக்களின் புரதச்சத்து குறைபாடு…

பால் உற்பத்தி நாற்பது வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். கால்நடை தீவனம், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறை, இறக்குமதி தடை காரணமாக உள்ளூர் பால் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் புரதச்சத்துக் குறைபாட்டால் மக்கள் அவதியுறுவதாகவும், புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு குழந்தைக்கு தினமும் 150 மில்லி பால் கொடுக்க வேண்டியிருந்தாலும், அந்தளவு கொடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்துகிறார். எரிபொருள் பற்றாக்குறையால் கால்நடைத் […]

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும்

பருப்பு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பாரியளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 1 கிலோ பருப்பின் விலை சுமார் 150 ரூபாவால் […]

எரிபொருள் நிறுவனங்களை மதிப்பீடு செய்ய குழு

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கூற்றுப்படி, பெற்றோலிய உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குழு நேற்று(5) நியமிக்கப்பட்டதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, எதிர்காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் பெற்றோலியத் தொழிலில் ஈடுபட பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]

உணவுப்பொதி, தேநீர் விலைகள் திங்கள் முதல் ….

எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் உணவுப்பொதி மற்றும் ஒரு கோப்பை தேநீரின் விலை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை குறையும் என எதிர்ப்பார்ப்பதாகவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com